செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

40 வருஷத்தில் பாண்டியன் செய்யாததை செய்து காட்டிய வாரிசு.. ராஜிக்காக பகையை முறியடிக்க போராடும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி தன்னுடைய அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது தன்னால் பார்க்க முடியவில்லை என்று கவலைப்படுகிறார். இருந்தாலும் தற்போது என் கையாலே சமைத்து என் அம்மாவுக்கு கொடுக்கணும் போல ஆசையாக இருக்கிறது என்று சொல்லி அம்மாவுக்கும் சேர்த்து சமைத்து விடுகிறார்.

அதை பாண்டியனுக்கு தெரியாமல் பழனிச்சாமிடம் கொடுத்து எப்படியாவது ஹாஸ்பிடலில் இருக்கும் நம் அம்மாவுக்கு இந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். அப்படி பழனிச்சாமி, சாப்பாடை எடுத்துட்டு போகும் போது அங்கே பாண்டியன் வந்துவிடுகிறார். ஆனால் பாண்டியனுக்கு தெரிந்தால் ஏதாவது பிரச்சனை பண்ணுவார் என்பதால் அனைவரும் சேர்ந்து சாப்பாடு இருப்பதை மறைத்து விடுகிறார்கள்.

இருந்தாலும் பாண்டியன் அது என்ன என்று நான் பார்க்க வேண்டும் என்று பழனிச்சாமி கையில் இருக்கும் பையை திறந்து பார்க்கிறார். அப்பொழுது அதில் சாப்பாட்டை இருப்பதை பார்த்து என்ன கோமதி இது என்று கேட்கிறார். உடனே கோமதி பயந்துகிட்டே என்னுடைய அம்மாவுக்காக நான் ஆசையை சமைத்துக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் பாண்டியன், உங்க அம்மா மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அதை என் மறைத்து வைத்து கொடுக்கணும். தைரியமா கொடுத்து அனுப்பு என்று சொல்லி பழனிச்சாமியை அனுப்பி விடுகிறார். பிறகு ஹாஸ்பிடலுக்கு போன பழனிச்சாமி, கோமதி கொடுத்த சாப்பாடு என்று சொல்லி அப்பத்தாவிடம் கொடுத்து சாப்பிட வைக்கிறார். அப்பத்தாவும் ஆனந்த கண்ணீர் விட்டு மகளை நினைத்து அழுது சாப்பிடுகிறார்.

இதை வீடியோ எடுத்துட்டு வந்து பழனிச்சாமி வீட்டில் இருப்பவர்களிடம் போட்டுக் காட்டுகிறார். இதை பார்த்ததும் கோமதி என் அம்மாவை பாக்கணும் போல இருக்கிறது என்று சொல்கிறார். உடனே கதிர், உன்னையும் ராஜியும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் அப்பத்தாவிடம் பேச வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறார். அதன் படி சரவணன் மற்றும் செந்தில் வைத்து பிளான் போடுகிறார்.

பழனிச்சாமியை சக்திவேல் மற்றும் முத்துவேல் வீட்டுக்கு அனுப்பி அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வராதபடி டைவர்ட் பண்ண சொல்லிவிட்டார். மேலும் சரவணன் மற்றும் செந்திலை கடைக்கு போக சொல்லிட்டு அப்பாவை வீட்டுக்கு வராதபடி பார்த்துக் கொள் என கதிர் பிளான் போட்டுவிட்டார். அதன்படி அம்மாவையும் ராஜியையும் கூட்டிட்டு கதிர் ஹாஸ்பிடலுக்கு போகிறார்.

அங்கே கோமதியை பார்த்ததும் அப்பத்தா ஆனந்த கண்ணீர் விட்டு அழுது அரவணைத்து விடுகிறார். பிறகு ராஜியையும் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திகைத்துப் போய் நிற்கிறார்கள். இதை அங்கே இருந்து கதிர் பார்த்து அப்பத்தாவிடம் பேசுகிறார். அதாவது கூடிய விரைவில் இரண்டு குடும்பத்தையும் நான் ஒன்று சேர்ப்பேன் இது நிச்சயம் என்று வாக்கு கொடுக்கிறார்.

இதை கேட்டதும் அங்கிருப்பவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அதாவது 40 வருடமாக பாண்டியன், கோமதியுடன் வாழ்ந்திருந்தாலும் தற்போது கோமதியின் மனநிலை என்னவென்று புரிந்து கொண்டு அதை சரி செய்ய முடியவில்லை. ஆனால் கதிர், விருப்பமே இல்லாமல் ராஜி கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் ராஜியின் மனநிலை புரிந்துகொண்டு மனைவிக்காக பெரிய ரிஸ்க் எடுப்பது மிகவும் பாராட்டக்கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில் அம்மா மற்றும் ராஜியின் ஆசையை கதிர் நிறைவேற்றி விட்டார். இதனை தொடர்ந்து ராஜிக்காக இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை தடுத்து எப்படியாவது சுமூகமான ஒரு குடும்பமாக ஆக்க வேண்டும் என்று கதிர் முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் இதில் குட்டையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் குமரவேலு செய்யப்போகும் அசம்பாவிதத்தால் அரசி பாதிக்கப்பட்டு மறுபடியும் பாண்டியன் குடும்பம் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறது.

Trending News