வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அப்பா வழியே வேண்டாம்ன்னு உதறிய 5 வாரிசுகள்.. உதயநிதி, மாதவன் பசங்க போடும் போடு

Successors of celebrities like Madhavan and Udhayanidhi who are making their mark in different fields: இந்திய  சினிமாவிலும் அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது நெப்போடிசம். ஆங்காங்கே இந்த நெப்போடிசம் தலை தூக்குவதால் சில இடங்களில் உயிர்கள் பலி வாங்கப்படுவதும் நடந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் உடைத்தெறிந்து “எங்கள் வழியில் நாங்கள் மின்னுவோம்” என்று சில பிரபலங்களின் குழந்தைகள் வெவ்வேறு துறைகளில் ஜொலிப்பதன் மூலம் தனது தந்தைக்கே பெருமையாக விளங்குகின்றனர். அவ்வாறான 5 வாரிசுகளை காணலாம்.

தலைவாசல் விஜய்-ஜெயவீணா:நீச்சல் வீரரான ஜெயவீணா ஒருமுறை தெற்காசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடிய போது ஒலித்த தேசிய கீதமும் பதக்கத்துடன் அவர் ஏந்திய இந்திய நாட்டு கொடியையும் கண்ட அவரது தந்தையான குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய் பெருமையில் பூரித்து போனதாக அனைவரிடமும் பகிர்ந்தார். ஒரு தந்தைக்கு இதைவிட வேறென்ன பெருமை வந்துவிட முடியும்?

மணிரத்தினம்- நந்தன்: கொரோனா காலத்தில் அதிகம் பாராட்டப்பட்ட நபர்களில் ஒருவர் நந்தன் மணிரத்தினம் ஆவார். அரசியலில் அதீத ஈர்வம் ஆர்வம் கொண்ட நந்தன் அவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னும் தன்னை தனிமைப்படுத்தி பொறுப்புள்ள பிள்ளையாக நடந்து கொண்டார். பல ஹீரோக்களும் மணிரத்தினம் படத்தில் நடித்து விடமாட்டோமா என்று தவம் கிடக்க நடிப்பின் பக்கம் திரும்பாமல் அரசியலையும் மக்களுக்கு சேவை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள நந்தனது செயல் சிறக்க வாழ்த்துக்கள்.

Also read: ஆப்பனண்டா ஆளே இல்ல, சோலோ ஆயிட்டேன்.. விஜய்யின் அரசியல் முடிவை கொண்டாடும் கூட்டம்

உதயநிதி- இன்பநிதி: நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி அவர்கள் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஆவார். தனது திறமையால் மணிப்பூரின் நெரோகா அணியில் விளையாடிய இன்பநிதி எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பதில் கில்லாடி என அந்த அணியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து உள்ளது.

மாதவன்- வேதாந்த்: மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட மாதவன் இந்திய சினிமாவில்  முன்னணி நடிகராக உள்ளார். நீச்சல் வீரரான மாதவனின் மகன் வேதாந்த் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்திய விளையாட்டு போட்டியில் 5  தங்கம் 2 வெள்ளி என ஏழு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு  மட்டுமல்ல மாதவனுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் வேதாந்த்.

குஷ்பூ- அவந்திகா: 90ஸ் காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியான குஷ்பு மற்றும் சுந்தர்சியின் மகள் அவந்திகா விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஆக்டிவாக இருப்பவர்.  தான் ஒரு செலிபிரட்டியின் மகள் என்ற கர்வம் கொள்ளாமல் வெளிநாட்டில் தங்கி படித்து வரும் அவந்திகா, மேக்கப் பிராண்ட்ஸ் தொடர்பான பிசினஸில் ஈடுபட்டு வருகிறாராம்.

Also read: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

Trending News