ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அந்த வீடியோவுக்கு பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா.? கதறும் க்ரஷ் நடிகை

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் க்ரஷ் நடிகையின் ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலியாக உருவாக்கப்பட்ட அந்த வீடியோவுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து தற்போது பல பிரபலங்களும் களத்தில் குதித்துள்ளனர். உண்மையில் இதற்குப் பின்னால் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறதாம்.

அதைத்தான் இப்போது கோடம்பாக்க டீ கடைகளில் பலரும் முணுமுணுத்து வருகின்றனர். அப்படி என்னதான் விஷயம் என காது கொடுத்து கேட்டதில் பல சமாச்சாரங்கள் இப்போ சிக்கி இருக்கு. அதாவது பலான வெப்சைட்டுகளில் நடிகையின் படுமோசமான வீடியோக்கள் ஒரிஜினல் போல உலா வருகிறதாம்.

அது மட்டுமல்லாமல் புது தொழில்நுட்பத்தை கொண்டு நடிகைகளுக்கே தெரியாமல் இப்படி ஒரு வேலைகளை பார்த்து வருகிறதாம் ஒரு கூட்டம். இதில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் குத்துவிளக்கு நடிகைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்து வருகிறது.

Also read: வாயிலேயே வடை சுட்ட நடிகர்.. நம்பி ஏமாந்து போன ஹீரோயின்

அதனாலேயே இப்போது பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கிரஷ் நடிகையின் வீடியோக்கள் பலான வெப்சைட்டுகளில் அதிகம் பகிரப்பட்டு வருகிறதாம். இதனால் நடிகை இப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் கதறி தீர்த்து இருக்கிறார்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது பல வெளிநாட்டு தொழிலதிபர்கள் இதுபோன்ற வீடியோக்களை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்களாம். அதனால் பணத்துக்காக ஒரு மாஃபியா கூட்டம் தற்போது நடிகைகளை வைத்து வீடியோ தயார் செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Also read: கையும் களவுமாக மாட்டிய நடிகை.. நடுரோட்டிலேயே இறக்கிவிட்ட காதலன்

Trending News