Suchithra: பழைய செந்தில் கவுண்டமணி காமெடி ஒன்றில் நடிகர் செந்தில் பதனி கொடுத்து குடும்பத்தை கெடுப்பார். பாடகி சுசித்ராவின் சமீபத்திய பேட்டிகளை பார்க்கும்போது நடிகர் தனுஷ் பலான விஷயங்களை கொடுத்து குடும்பத்தை கெடுத்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
அடுத்தவன் குடும்பம் தானே கெட்டு சீர் அழிந்தால் நமக்கு என்னன்னு இருக்கலாம். ஆனா சொந்த அண்ணனின் குடும்பத்தை கூடவா நடுத்தெருவுக்கு கொண்டு வரும் அளவுக்கு இந்த பார்ட்டி கலாச்சாரம் போகும் என்ற சந்தேகம் இப்போது வந்திருக்கிறது.
செல்வராகவன் தனுஷின் அண்ணன் என்பதை தாண்டி அவருக்கு குரு போன்றவர். தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று ரசிகர்களிடையே பேர் வாங்கி இருக்கிறார். தன்னுடைய இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தில் அவர் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் ஒரு வருடத்திற்குள்ளேயே முடிவுக்கு வந்துவிட்டது. வழக்கம் போல சோனியா அகர்வால் அக்கட தேசத்து ஹீரோயின் என்பதால் அவர் மேல்தான் தப்பு இருக்கும் என்று சொல்லி முடித்து விட்டார்கள்.
இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆண்ட்ரியா நடித்த பிறகு செல்வராகவன் மற்றும் ஆண்ட்ரியா இருவருக்கும் இடையே இருந்த நட்புதான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று அப்போது பேசப்பட்டது. அதை இப்போது உறுதிப்படுத்துகிறார் பாடகி சுசித்ரா.
சொந்த அண்ணனின் விவாகரத்திற்கு காரணமான தம்பி
தனுஷ் நடத்தும் பார்ட்டிகளில் அண்ணன் செல்வராகவன் கூட கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஆண்ட்ரியா ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் நெருங்கிய தோழி என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் இவர்களுக்குள் நல்ல நட்பு இருந்திருக்கிறது.
எனவே ஆண்ட்ரியாவும் இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதிக அளவு போதையில் இருக்கும்போது செல்வராகவனுக்கு ஒரு டார்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டேரை நிறைவேற்றுவதற்காக ஆண்ட்ரியாவின் தலைமுடியை பிடித்து தர தர என இழுத்து நடந்து போயிருக்கிறார் செல்வராகவன்.
இப்படி இவர்களுக்குள் பார்ட்டி கலாச்சாரம் அதிகமானது தான் செல்வராகவனின் விவாகரத்திற்கும் காரணம் என இப்போது தெரியவந்திருக்கிறது. சொந்த அண்ணனுடன் தனுஷ் இப்படி பார்த்து இல் கலந்து கொண்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.