வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கட் அவுட் பிரச்சனையில் முளைத்த திடீர் திருப்பம்.. அஜித்தை பாலோ செய்யும் சூர்யா

Actor Suriya: நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு விக்ரம் படத்தில் கிடைத்த ஸ்கூரை கொண்டு அடுத்த கட்ட பட வாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறார் சூர்யா. இந்த நிலைமையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன் கொள்கையில் மாற்றம் காட்டி வரும் சூர்யா பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட 14 ஆம் நூற்றாண்டு படமாய் உருவாகும் கங்குவா படத்தில் பிசியாக இருந்து வருகிறார் சூர்யா. பல எதிர்பார்ப்புகளை முன்வைக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான கட் அவுட் வைப்பதற்காக, மன்றம் சார்பில் எடுத்த முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read: மேடையில் கெட்ட வார்த்தை பேசிய மிஷ்கின்.. தத்துவம் சொல்றேன்னு பெயரைக் கெடுத்துக் கொண்டு செய்யும் அக்கப்போரு

அவ்வாறு கட் அவுட் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இரண்டு இன்ஜினியரிங் காலேஜ் பசங்க, மின்சாரம் தாக்கி உயிர் இழந்து சம்பவம் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த சூர்யா சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வீடியோ கால் செய்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் நிதி உதவியும், குடும்பத்தில் பெண் பிள்ளைகளுக்கு வேலை வாங்கி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் இடையே நன்றாக படியுங்கள், கட்அவுட் வைக்கிறேன், பால் அபிஷேகம் செய்கிறேன் என தேவையில்லாத செயல்கள் ஈடுபடாதீர்கள் எனவும் கூறி வருகிறார்.

Also Read: இனியா விஷயத்திலும் தோற்றுப்போன கோபி அங்கிள்.. யாருமே மனுஷனா கூட மதிக்கிறது இல்ல, என்ன கொடுமை சார் இது

இந்த உயிரிழப்பை கேள்விப்பட்ட சூர்யா மிகவும் நொந்து போய் காணப்பட்டு வருகிறார். இது போன்ற பிரச்சனை இனி வரவே கூடாது என்பதற்காக அறவே மன்றத்தை கலைக்க முடிவு எடுத்து உள்ளார். இவரின் இத்தகைய செயல் அஜித்தை போன்று இருப்பதாகவும் பல கிசுகிசுகள் எழத் தொடங்கியது.

அதை தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல விஷயங்களை நிராகரித்தும், முட்டுக்கட்டை போட்டும் வருகிறார். இவர் போற போக்கை பார்த்தால் அஜித்தை போல, அனைத்திலிருந்தும் விலக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read: அட்லீயை மிஞ்சிய மடோன் அஸ்வின்.. லிஸ்ட் போட்டு புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்

Trending News