Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சித்ரா மரணத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய ஹேம்நாத்.. வேகமெடுக்கும் தற்கொலை வழக்கு

சித்ரா மரணத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய ஹேம்நாத்.. வேகமெடுக்கும் தற்கொலை வழக்கு

வீடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது. மேலும் முதன்முதலாக […]

வீடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது.

மேலும் முதன்முதலாக வெள்ளித்திரையிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததுவந்தது.

இந்நிலையில் திடீரென தனியார் ஹோட்டல் ஒன்றில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் இதற்கு காரணம் யார் என்பது பல தரப்பிலிருந்து விசாரிக்கப்பட்டது. ஆனால் சித்ராவின் பெற்றோர் இதற்கு காரணம் ஹேம்நாத் தான் என கூறியிருந்தனர்.

ஆனால் ஹேம்நாத் இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்பு ஹேம்நாத் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். சித்ராவின் கொலை வழக்கில் அரசியல் பின்புலம் உள்ளது என கூறியுள்ளார். அவர்கள் தற்போது என்னை மிரட்டி வருகிறார்கள்.

இதனால் என் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இந்நிலையில் நான் குற்றமற்றவன் என நிரூபிக்க உயிரோட இருக்க வேண்டும். அதற்காக எனக்கு போலீஸ் பாதுகாப்பு தாருங்கள் என புகார் அளித்துள்ளார். தன் மீது குற்றம் சாட்டப்பட்ட போதும் ஹேம்நாத் ஏன் இந்த விஷயங்களை சொல்லவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் உண்மையில் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கேள்வி இப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சித்ரா மிகவும் தைரியமானவர், அவருடைய தற்கொலையில் ஏதோ பெரிய பின்புலம் உள்ளது எனவும் கூறி வருகின்றனர். மேலும் மிக விரைவில் இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.