வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுதா கொங்காராவிடம் மூக்கை உடைத்துக்கொண்ட சூர்யா.. கங்குவா கொடுத்த ஆஃபரை தூக்கி எறிந்த அயன் லேடி

சூர்யா 44 படம் அந்தமானில் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்குவா படம் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் வி எப் எக்ஸ் வேலைகள் மட்டும் பாக்கி இருக்கிறது. வேட்டையன், கங்குவா போன்ற படங்கள் இந்த வருட தீபாவளி அன்று அக்டோபர் 29ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

சூர்யா சோலோ ஹீரோவாக நடித்து ஹிட்டான படம் ஜெய் பீம். அந்த படத்திற்குப் பிறகு சூர்யாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை. ஜெய் பீம் படமும் 2021 ஆம் ஆண்டு வந்தது. எதற்கும் துணிந்தவன் படம் அவருக்கு பிளாப் ஆனது.

விக்ரம், நம்பி எபெக்ட் போன்ற படங்களில் சூர்யா கெஸ்ட் ரோல் மட்டும் பண்ணியுள்ளார். தற்போது மூன்று வருடம் ஹிட் கொடுக்காததால் கங்குவா படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படம் ஹிட் என்பதை உறுதி செய்துள்ளது.

இதனிடையே சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்காரா சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. புறநானூறு என்ற தலைப்பில் சூர்யா நடிப்பதாக இருந்த அந்தப் படத்தின் கதை பிடிக்கவில்லை என அவரை நிராகரித்துவிட்டார். இதனால் சூர்யா மீது கடும் அப்செட்டில் இருந்தார் சுதா.

கங்குவா கொடுத்த ஆஃபரை தூக்கி எறிந்த அயன் லேடி

இப்பொழுது சூர்யா தானாக முன்வந்து சுதா கொங்காரவிடம் வேற கதையை ரெடி பண்ணுங்கள் அடுத்த படம் பண்ணலாம் என சரண்டர் ஆகி உள்ளார். ஆனால் சுதா புறநானூறு படம் பண்ணும் முடிவில் உறுதியாக இருக்கிறார். நீங்கள் நடிக்கா விட்டால் பரவாயில்லை வேறு ஹீரோ பார்த்துக் கொள்கிறேன் என மூக்கை உடைத்துள்ளார்.

தற்சமயம் புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறார். ஏற்கனவே சூர்யா இழுத்துக் கொண்டிருக்கும் படம் வாடிவாசல். அந்தப் படத்திலும் தனுஷ் நடிக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் கூடிய விரைவில் புறநானூறு படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News