செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேஜிஎஃப் கூட்டணியில் மிரட்டப் போகும் சுதா கொங்கரா.. ஆனா ஹீரோ சூர்யா இல்லையாம்!

தமிழில் இறுதிசுற்று, சூரரை போற்று போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. தன்னுடைய எதார்த்தமான திரைக்கதையின் மூலம் பல விருதுகளை பெற்ற இவரின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக இரண்டு திரைப்படங்களை இயக்க இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. அதில் இவர் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

ஏற்கனவே சுதா கொங்கரா தன்னுடைய அடுத்த திரைப்படம் நிச்சயம் சூர்யாவுடன் தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அந்த திரைப்படம் சூரரை போற்று திரைப்படத்தை விட மிகவும் சவாலான ஒரு திரைக்கதையாக இருக்கும் என்றும், அந்த பட வேலைகளை தூங்குவதற்கு காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இப்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாத போதிலும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட செய்தியாகவே இருக்கிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதன் மூலம் சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகி வருகிறார்.

மேலும் சுதா கொங்கரா கேஜிஎப் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரித்த ஹோம்பேல் நிறுவனத்திற்கும் மற்றுமொரு படம் இயக்க இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பை அந்த நிறுவனமே வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கான ஹீரோ உள்ளிட்ட நட்சத்திரங்களின் தேர்வு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதையை மையமாக வைத்து இயக்கவுள்ளார். இந்தியளவில் இந்த படத்திற்கான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அந்த வகையில் சுதா கொங்கரா பல நாட்கள் காத்திருந்த தன்னுடைய படைப்பை உருவாக்க தயாராகிவிட்டார்.

ஏற்கனவே இதே தயாரிப்பில் வெளிவந்த கே ஜி எஃப் படம் கிட்டத்தட்ட 1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டது. இதனால் இந்த படமும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News