செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கணவரை மட்டம் தட்டி பேசிய சுஹாசினி.. நேர்காணலில் முகம் சுளிக்க வைத்த பேச்சு

நடிகை சுஹாசினி எண்பதுகளில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர், கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருப்பார். தன்னுடைய திறமையான நடிப்பினால் தேசிய விருது வாங்கியிருக்கிறார் சுஹாசினி. அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்தார்.

மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசனின் உடன் பிறந்த அண்ணனான சாருஹாசனின் மூத்த மகளாவார். இதனால் சுஹாசினிக்கு பேரும் புகழும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மேலும் இந்திய இயக்குனர்களில் முன்னணியில் இருப்பவரான இயக்குனர் மணிரத்னத்தை இவர் திருமணம் செய்து கொண்டார். இது மேலும் அவருக்கு பெயரை தேடி தந்தது.

Also Read:பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?

தற்போது சுஹாசினி கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு மணிரத்னத்தின் படங்களில் உதவியாளராகவும் வேலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நலிவுற்ற பெண்களின் நலன் காக்கும் வகையில் நாம் என்னும் ட்ரஸ்டையும் நடத்தி வருகிறார். பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் இவர் பிரபலங்களை நேர்காணலும் செய்து வருகிறார்.

இவருடைய சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் பேட்டி எடுத்தார். அப்போது சுஹாசினி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் தன்னுடைய கணவரும் பிரபல இயக்குனருமான மணிரத்னத்தை பற்றி பேசிய விஷயங்கள் நிகழ்ச்சியை பார்த்த பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

Also Read:திரிஷா இல்லைனா நயன்தாரா.. அடுத்த கதாநாயகியை லாக் செய்த மணிரத்தினம்

அதில் நானும், மணிரத்னமும் திருமணம் செய்து கொள்ளும்போது நான் ஒரு மிகப்பெரிய பிரபலமான நடிகை என்றும், அவர் அப்போதுதான் ஒன்றிரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் என்றும் சொல்லியிருந்தார். மேலும் அப்போது சுஹாசினி பொருளாதார ரீதியாக நன்றாக இருந்ததாகவும் ஆனால் அவருடைய கணவர் மணிரத்தினம் பேங்க் அக்கவுண்டில் வெறும் 15000 மட்டுமே இருந்தது என்றும் பேசி இருந்தார்.

சினிமா கலைஞர்கள் எல்லோருமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றி பேசுவது என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் சுஹாசினி பேசும் பொழுது ரொம்பவும் ஆணவமாக பேசுவது போல் இருந்தது. இந்தியாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம் பற்றி அவர் சொன்ன இந்த விஷயம் ரொம்பவே முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

Also Read:குந்தவைக்கு ஏன் கல்யாணம் நடக்கல? உண்மையை புட்டு புட்டு வைக்கும் திரிஷாவின் அம்மா

Trending News