பாண்டியன் கோமதியை முட்டாளாக்கிய சுகன்யா.. மீனாவையும் செந்திலையும் டார்கெட் பண்ணி டிராமா போடும் பச்சோந்தி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒற்றுமையாக இருந்த பாண்டியன் குடும்பத்தில் சுகன்யா எப்பொழுது காலடி எடுத்து வைத்தாரோ, அப்பொழுது அந்த குடும்பம் பாழாகிவிட்டது. அதாவது சுகன்யா மற்றவர்களிடம் நல்லவள் போல் பேசி பழனிவேலுவை மறைமுகமாக டார்ச்சர் பண்ணி, பாண்டியன் குடும்பத்திற்கு தீங்கு செய்யும் விதமாக அரசியை குமரவேலுடன் சேர்த்து விட்டு வேடிக்கை பார்த்தார்.

இதனால் பாண்டியன் குடும்பத்தில் பூகம்பம் வெடித்த நிலையில் மறுபடியும் சுகன்யா ஒரு பிரச்சனையை கொண்டு வர ஆரம்பித்து விட்டார். அதாவது அரசியை காலேஜில் டிராப் பண்ணும் பொழுது குமரவேலுக்கு தகவலை கொடுத்து அரசியிடம் பேச வைக்கிறார். அங்கு வந்த மீனா மற்றும் செந்தில் குமரவேலுவை கண்டித்து அனுப்பிய நிலையில் மீனா, நீங்க தான் அவனுக்கு தகவலை சொல்லி வர வைத்தீர்களா என்று கேள்வி கேட்டு திட்டி விடுகிறார்.

செந்திலும் மீனா சொல்வது சரி என்று சுகன்யாவிடம் கேள்வி கேட்கிறார். உடனே சுகன்யா வீட்டுக்கு சென்று பாண்டியன் மற்றும் கோமதி இடம் நீலி கண்ணீர் வடித்து ஒரு டிராமாவை போடுகிறார். அதாவது காலேஜுக்கு குமரவேலு வந்து விட்டார், நான் அவனை அரசிடம் பேச விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே செந்தில் மற்றும் மீனா வந்து என்னை தவறாக பேசி தரை குறைவாக நடத்தி விட்டார்கள்.

எனக்கு ரொம்பவே அவமானமாக போய்விட்டது என்று அழுது கொண்டே மீனா மற்றும் செந்திலை டார்கெட் பண்ணும் அளவிற்கு பாண்டியன் மற்றும் கோமதி இடம் பொய் சொல்லி முட்டாளாக்கி நம்ப வைத்து விட்டார். இவர்களும் நேற்று வந்த சுகன்யாவை அதிகமாக நம்பி மீனா மற்றும் செந்தில் மீது சந்தேகப்படும் விதமாக நான் அவங்க வந்ததும் கேட்கிறேன் என்று சொல்லி சுகன்யாவை சமாதானப்படுத்துகிறார்கள்.

ஆனால் சுகன்யா பச்சோந்தி மாதிரி நேரத்துக்கு நேரம் மாற்றிக் கொண்டு கிரிமினலாக வேலை பார்க்கிறார். இன்னும் இந்த சுகன்யா என்னெல்லாம் சதி செய்து பாண்டியன் குடும்பத்தை அல்லல் படுத்தப் போகிறாரோ, அதற்கு மீனா செந்தில் மட்டும் எதிர்த்து போராட முடியாது. கதிர் ராஜி மற்றும் தங்கமயில் அனைவரும் சேர்ந்து சுகன்யாவின் முகத்திரையை கூடிய சீக்கிரத்தில் பாண்டியன் குடும்பத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

Leave a Comment