Atlee: இயக்குனர் அட்லிக்கு ஜவான் படத்திற்கு பிறகு மவுசு கொஞ்சம் அதிகமாகிவிட்டது தான். அதற்காக வந்த இடத்தை மறந்து விட்டு அடாவடி பண்ணி வசமாக சிக்கி இருக்கிறார்.
ஓவர் நைட்டில் ஒபாமா என்றால் அது அட்லியை தான் சொல்ல வேண்டும். ராஜா ராணிக்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்கள் தளபதியுடன் பணி புரிந்தார்.
கொஞ்சம் ஓவரா போறீங்க பாஸ்!
அடுத்து பாலிவுட்டில் பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இதை தொடர்ந்து அட்லி தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் வைத்து படம் பண்ண எல்லா பிளானையும் கச்சிதமாக போட்டு விட்டார்.
ஜவான் வெற்றி மற்றும் புஷ்பா படத்தின் வெற்றி இந்தக் கூட்டணிக்கு பெரிய ஹைப் ஏற்றியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்கள்.
ஆனால் வெற்றி களிப்பிலிருந்த அட்லி அவருக்கு சம்பளம் மட்டுமே 100 கோடி கேட்டு இருக்கிறார். இதுகுறித்து பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பட தயாரிப்பில் இருந்து விலகி இருக்கிறது. தற்போது இந்த படத்தை தயாரிக்க SVC தயாரிப்பு நிறுவனம் முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.