ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பழனிக்கு பால்காவடி எடுத்தாலும் அவர் கூட படம் பண்ண வாய்ப்பில்ல.. அடுத்து அஜித்தை குறிவைக்கும் சன் பிக்சர்ஸ் மாறன்

Sun Pictures – Ajith Kumar: ஆடின காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படிதான் காசு பார்த்த கையும். அடுத்தடுத்து சம்பாதிக்கிறது எப்படின்னு அலைந்து தேடிட்டே தான் இருக்கும். அந்த நிலைமை தான் இப்போ சன் பிக்சர்சுக்கு. ஜெயிலர் படம் போட்ட முதலுக்கு பல மடங்கு வசூலை கொடுக்க, அடுத்து இப்படியே அள்ளி விட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டம் போட்டு வருகிறது இந்த தயாரிப்பு நிறுவனம்.

இப்படி கோடிக்கணக்கில் வசூலை அள்ள வேண்டும் என்றால் அது டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்தால் மட்டும்தான் நடக்கும். அதனால் தான் தலைவர் 171 படத்தையும் வளைத்துப் போட்டு விட்டது. லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்பதுதான் சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்படும் பேச்சு.

Also Read:அட நம்புங்கப்பா உண்மை தான்.. விடாமுயற்சி ஷூட்டிங் எங்க, எப்ப ஆரம்பிக்குது தெரியுமா?

ரஜினியை தொடர்ந்து கமல் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால், அவர் விக்ரம் படத்திருக்க பிறகு எல்லா படங்களையும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் பண்ண தொடங்கி விட்டார். அதற்கு அடுத்து இருப்பவர் என்று பார்த்தால் தளபதி விஜய் தான். ஆனால் இனி சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தளபதி விஜய்யும் இணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை.

அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் அரசியல் என்ட்ரி தான். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக அதன் பிறகு சன் பிக்சர்ஸ் உடன் இணையவே மாட்டார். ஏனென்றால் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆளும் கட்சிக்கு நெருங்கிய உறவினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் தான் வேறு ஒரு டாப் ஹீரோவை வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ்.

Also Read:அஜித்தின் அம்மா மருத்துவ செலவுக்கு உதவாத தயாரிப்பாளர்.. பழசை மறக்காத ஏகே

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்து இணைய இருப்பது நடிகர் அஜித்குமார் உடன் தான். இதற்கான பேச்சு வார்த்தையின் இறங்கி இருக்கிறது இந்த நிறுவனம். அஜித்தின் விடாமுயற்சி படம் முடிந்து, தலைவர் 171 படம் முடிவடையும் நிலையில் இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப்படும். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகளும் அதன் பின்னர் வெளியாகும்.

அஜித் மற்றும் சன் பிக்சர்ஸ் இணையும் படத்தை தயாரிக்க இருப்பது இயக்குனர் நெல்சன் தான். இதற்காகத்தான் கார் மட்டும் செக் என பரிசுகளை வாரி வழங்கி நெல்சனை லாக் செய்து இருக்கிறார் கலாநிதி மாறன். எப்படி இருந்தாலும் அஜித் மற்றும் நெல்சன் இணைய வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு தான்.

Also Read:LCU இல்லாத புதிய கூட்டணி.. அஜித்திற்கு வலை வீசும் சூப்பர் ஸ்டார்

Trending News