Coolie Release Update: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தின் வேலைகள் முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த வருட தீபாவளி அல்லது ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என செய்திகள் வந்தன. ஆனால் தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இது ரஜினி ரசிகர்கள் எதிர்பாராத ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.
மேலும் ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை மற்றும் மறுநாள் 15 ஆம் தேதி அரசு விடுமுறை. அதைத்தொடர்ந்து வார இறுதி என தொடர் விடுமுறை நாட்களாக இருக்கிறது.
கூலி ரிலீஸ் தேதியை லாக் செய்த சன் பிக்சர்ஸ்
அதை குறி வைத்து தான் தயாரிப்பு தரப்பு இந்த தேதியை லாக் செய்துள்ளது. மேலும் அக்டோபர் மாதம் இட்லி கடை உட்பட அடுத்தடுத்து படங்கள் வெளிவர இருக்கிறது.
அதனாலேயே தேவா ஆகஸ்ட் மாதம் தரிசனம் கொடுக்க வருகிறார். அது மட்டும் இன்றி ரஜினி நடிக்க வந்து இது 50 ஆவது ஆண்டு.
அதை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் கூலி முதல் ஆயிரம் கோடி படம் என்ற சாதனையை படைக்கும் என வாழ்த்தி வருகின்றனர்.