Jailer 2 Announcement Teaser: கலாநிதி மாறன், ரஜினிகாந்த் கூட்டணியில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயிலர் வசூலில் பட்டையை கிளப்பியது. நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் பாடல்களும் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானது.
அதை அடுத்து தலைவர் நடிப்பில் வேட்டையன், லால் சலாம் ஆகிய படங்கள் வந்தது. ஆனாலும் ஜெயிலர் அளவுக்கு இல்லை.
அதை தொடர்ந்து இப்போது தலைவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது.
ஜெயிலர் 2 அப்டேட் டீசர்
அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 அப்டேட் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே பொங்கல் திருநாளில் இப்படி ஒரு அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்களை ஏமாற்றாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
வழக்கம் போல அனிருத் நெல்சன் இருவரின் காமெடியில் தொடங்கி தலைவரின் அலப்பறையில் முடிந்துள்ளது அந்த வீடியோ. ஆக மொத்தம் மீண்டும் இந்த கூட்டணி 2000 கோடி வசூலுக்கு தயாராகிவிட்டது.