அட்லி நீண்ட நாட்களுக்கு முன்னரே சன் பிக்சர்ஸ்க்கு டேட் கொடுத்து விட்டார். ஆனால் இன்று வரை அந்த ப்ராஜெக்ட் கைகூடி வரவில்லை. ஆரம்பத்தில் சல்மான் கான், அட்லீ கூட்டணியில் படம் உருவாக அதை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஹீரோ மாறிவிட்டார்.
தற்சமயம் அட்லீ, அல்லு அர்ஜுனனை வைத்து படம் பண்ணவிருக்கிறார். ஆரம்பத்தில் அல்லு கேட்ட சம்பளத்தால் சன் பிக்சர்ஸ் ஆடி போனது. ஆனால் இப்பொழுது இந்த ப்ராஜெக்ட் கிளிக் ஆகியுள்ளது. இதற்கு பின்னால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது.
அல்லு அர்ஜுன் இந்த படத்திற்கு சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு கேட்டுள்ளார். இதற்கு சன் பிக்சர்ஸ் ஓகே சொல்லி உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் அள்ளியது. இதனால் இந்த அரிய வாய்ப்பை விட்டு விட வேண்டாம் என தக்க வைத்துக்கொண்டது சன் பிக்சர்ஸ்.
மேலும் இந்த படத்தை பெரிய லெவலில் கொண்டு செல்ல வேண்டும் என திட்டம் போட்ட சன் பிக்சர்ஸ், இதில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பிளான் பண்ணி வருகிறது. அவர் மட்டுமல்ல இந்திய அளவில் இந்த படத்தை கொண்டு செல்வதற்காக இதில் ஆர்டிஸ்ட்களை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியோ, தம்பி அட்லியின் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. இந்தப் படத்திற்கு சன் பிக்சர்ஸ் இடம் 100 கோடிகள் வரை சம்பளமாக கேட்டுள்ளார் அட்லீ . ஆரம்பத்தில் இதற்கு அல்லு அர்ஜுன் 300 கோடிகள் கேட்டது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இந்த படத்தின் லாபத்திலும் பங்கு கேட்டு அள்ளி கொள்கிறார்.