திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

சன் பிக்சர்ஸ் கல்லாவை குறி வைத்த மாஸ் ஹீரோ.. அட்லிக்கு அடித்த ஜாக்பாட்

Sun Pictures : கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட படங்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெல்சன், ரஜினி கூட்டணியில் உருவான ஜெயிலர் படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் லாபத்தை கொடுத்தது.

இதனால் ரஜினி, நெல்சன், அனிருத் என மூவருக்கும் காரை பரிசாக கலாநிதி மாறன் வழங்கி இருந்தார். அதோடு ஜெயிலர் 2 படப்பிடிப்பும் இப்போது தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் மற்றொரு பிரமாண்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

அட்லி ஒரு புறம் சல்மான் கான் படத்தை எடுக்க உள்ள நிலையில், மற்றொருபுறம் அல்லு அர்ஜுன் படத்தை எடுக்க உள்ளாராம். இப்படத்திற்கான கதையை மூன்று மாதத்திற்கு முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம்.

மாஸ் ஹீரோவின் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்

மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே அல்லு அர்ஜுனின் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன் வந்து இருந்தது. ஆனால் அல்லு அர்ஜுன் 200 கோடி சம்பளம் கேட்டதால் அப்போது சில காரணங்களினால் படம் தள்ளிப் போயிருந்தது.

இப்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் அவரின் சம்பளம் கண்டிப்பாக அதிகபடியாக உயர்ந்திருக்கும். ஆனாலும் இப்போது அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து சன் பிக்சர்ஸ் அல்லு அர்ஜுன் படத்தை தயாரிக்க உள்ளது.

மேலும் விரைவில் இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதோடு அல்லு அர்ஜுன் சம்பளம் அதிகமானால் கண்டிப்பாக அட்லியின் சம்பளமும் அதிகரிக்கும். இதனால் அவருக்கு ஜாக்பாட் தான் அடித்திருக்கிறது.

Trending News