Singapenne Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்க பெண்ணே சீரியலில், கிராமத்து தேவதையாக வலம் வந்த ஆனந்தியை பார்த்த அந்த நொடியில் இருந்து மகேஷ் அவருடைய மனசை பறிகொடுத்து காதலிக்க ஆரம்பித்து விட்டார். காதலித்த பெண்ணை தன்னுடைய கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்க்கிறது என்று தெரிந்ததும் மொத்த பாசத்தையும் கொட்டும் விதமாக மகேஷ், ஆனந்தியை உயிராக நினைத்து காதலித்து வருகிறார்.
இதற்கு இடையில் ஆனந்தி வேலை விஷயமாக சென்னைக்கு வந்த பொழுது ஆனந்தியின் வெள்ளந்தியான பேச்சுக்கும் பாசத்திற்கும் அடிமையாகி போன அன்பு, அழகன் என்ற பிம்பத்தை கொடுத்து அவருடைய காதலை வெளிப்படுத்தி வந்தார். தற்போது அழகன் தான் அன்பு என்ற விஷயம் ஆனந்திக்கு தெரிய வந்த நிலையில் இவர்கள் இருவருடைய காதலும் கைக்கூடி விட்டது.
இது எதுவும் தெரியாத மகேஷ், அவருடைய காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தும் பொழுது ஆனந்தியால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு விடுகிறார். இதனால் காதலில் தோல்வி அடைந்து நிற்கும் மகேஷ் தற்போது ஹீரோ கேட்டகிரியில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். அதாவது சன் டிவியில் சன் குடும்ப விருதுகள் விருதுக்கான ஓட்டுகள் நடைபெற்று வருகிறது.
இதில் பேவரிட் ஹீரோ என்ற கேட்டகிரியில் ஆனந்த ராகம் சீரியலில் அழகு சுந்தரம், கயல் சீரியலில் எழில், மருமகள் பிரபு, மூன்று முடிச்சு சூர்யா, மல்லி சீரியலில் விஜய் மற்றும் சிங்க பெண்ணே சீரியலில் அன்புவும் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். அந்த வகையில் பேவரைட் ஹீரோ என்ற அந்தஸ்து மகேஷுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
சிங்க பெண்ணே சீரியலை பொருத்தவரை மகேஷ் மற்றும் அன்பு இரண்டு பேருமே முக்கிய ஹீரோக்களாக தான் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். இரண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்று மக்கள் கொண்டாடி வரும் சமயத்தில் ஒரு தலைப்பட்சமாக பேவரைட் கேட்டகிரி அன்புக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.
இதனால் அன்புவின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி இது அன்புக்கு கிடைத்த வெற்றி என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஃபேவரைட் ஹீரோ என்ற விருதையும் அன்புதான் பெறப்போகிறார்.