வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு தண்ணி காட்டும் சன் டிவி.. கிளைமாக்ஸ் காட்சியை வைத்து முன்னேறிய பாரதிகண்ணம்மா

வெள்ளி திரைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு அனுதினமும் பார்க்கக்கூடிய சின்னத்திரை சீரியல்களுக்கும் என்றே தனி கூட்டம் உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் அப்பா பொண்ணு பாசத்தை மையமாகக் கொண்டு அமைந்ததாகும். சூழ்நிலை கைதியாக மாட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய அப்பாவை மீரா பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு எவ்வாறு மீட்க போகிறார் என்பதைப் போல கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தில் உள்ளது.

Also Read: வாணி போஜனிடம் மயங்கி, டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட 4 நடிகர்கள்.. அடுத்தடுத்து 2 பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ

எதிர்நீச்சல்: இதில் ஆணாதிக்கத்திலிருந்து எவ்வாறு குடும்பப் பெண்களை மீட்டுக் கொண்டு வரப்போகிறார் என்று விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

பாரதிகண்ணம்மா: 15 வருடங்களாக சந்தேக பார்வையில் மனைவியை ஒதுக்கி வைத்திருந்த பாரதிக்கு தற்போது கண்ணம்மா குற்றமற்றவர் என்ற விஷயம் தெரிந்ததும் அவர் காலில் விழுந்த மன்னிப்பு கேட்கிறார். அதுமட்டுமின்றி இவ்வளவு நாள் பாரதியின் வாழ்க்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த வெண்பாவின் சுய ரூபத்தை, அவர் வாயாலயே ஒத்துக் கொண்டு தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இன்னும்  சில தினங்களில் பாரதிகண்ணம்மா சீரியல் நிறைவடை உள்ளதால் கிளைமாக்ஸில் அடுத்தடுத்த திருப்பங்களை அரங்கேற்றி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனால் எப்போதுமே பின்தங்கி இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் இந்த வாரம் டிஆர்பி யில் முன்னேறி 4-ம் இடத்தைப் பெற்று இருக்கிறது.

Also Read: யாரும் எதிர்பாராத பாரதிகண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸ்.. 2ம் பாகத்திற்கு போட்ட பிள்ளையார் சுழி

வானத்தைப்போல: இந்த சீரியலில் பொன்னி சந்தியா சின்ராசு இவர்களிடையே நடக்கும் லூட்டியால் மிகவும் கலகலப்பாகவும் இதே சமயம் துளசி சூழ்நிலையால் உண்மையை வெளியே சொல்ல முடியாமலும் சமாளிப்பது போல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த வாரத்தில் சுந்தரி சீரியலில் அருணின் வில்லத்தனத்தால் சுந்தரிக்கு பதில் அனு சூழ்நிலை கைதியாக மாட்டியுள்ளார் அவரைக் காப்பாற்ற சுந்தரி, கார்த்திக் திருமுருகன், பழனி என அனைவரும் காப்பாற்ற போராடிக் கொண்டிருப்பது போல கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

கயல்: இதில் பெரியப்பா குடும்பத்தின் சூழ்ச்சியால் கயலின் வேலை பறிபோனதோடு எழில் மற்றும் கயல் இடையே உள்ள நட்பையும்,கைவிட வேண்டும் என்ற குறிக்கோளில் கதை அமைந்துள்ளது.இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் 1வது இடத்தை பிடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து 7-வது இடம் ரோஜா சீரியலுக்கும், 8-வது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கும், 9-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும், 10-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பெற்றிருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல், இந்த வாரம் டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருப்பதை விஜய் டிவி தங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கின்றனர்

Trending News