ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சன் டிவி சீரியல் டாப் 6 ஹீரோயின்களின் சம்பளம் விவரம்.. லட்சுமி கட்டாட்சியமா முதலிடத்தை தட்டி பறித்த நடிகை

Sun TV serials: இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். கலர் கலர் புடவைகள், மேட்சிங் ஆன அணிகலன்கள், லட்சனமான மேக்கப் போட்டுக் கொண்டு ஒவ்வொரு நாடகத்திலும் வரும் ஹீரோயின்களுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவார்கள் போல.

இந்த ஹீரோயின்களுக்காகவே இப்போது இளைஞர்கள் கூட சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எப்போதுமே டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல்களின் ஹீரோயின்களின் சம்பள விவரத்தை பார்க்கலாம்.

மதுமிதா: சீரியல் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நாடகம் தான் எதிர்நீச்சல். இந்த நாடகத்தால் தான் நிறைய ஆண்கள் கூட சீரியல் பார்க்க ஆரம்பித்தார்கள். இதில் ஜனனி கேரக்டரில் நடித்தவர்தான் மதுமிதா. இவர் கன்னட சீரியல்கள் பல நடித்திருக்கிறார். தமிழில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் அறிமுகமானார். இவருக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

சைத்ரா ரெட்டி: ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வெள்ளை கேரக்டரில் நடித்தவர்தான் சைத்ரா ரெட்டி. என்னதான் வில்லியாக இருந்தாலும் அழகில் அவ்வளவு அம்சமானவர். இவருக்கு கயல் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் அவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.

கேப்ரியல்லா செல்லஸ்: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரீட்சையமானவர்தான் கேப்ரியல்லா செல்லஸ். கடிதாசிகாரி என்னும் பெயரில் டிக் டாக்கில் நிறைய வீடியோக்கள் போட்டதன் மூலம் இவர் பிரபலமானார். தற்போது சுந்தரி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் ஒரு நாளைக்கு 12,000 சம்பளமாக பெறுகிறார்.

ஆலியா மானசா: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான ஆலியாவுக்கு ரசிகர்கள் அதிகம். அதன் பின்னர் அதே சேனலில் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சன் டிவியின் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருடைய ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்.

ஸ்ருதிராஜ்: வெள்ளி திரை யிலிருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். ஆபிஸ் மற்றும் தென்றல் சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். தற்போது சன் டிவியின் லட்சுமி சீரியலில் நடித்து வரும் இவருடைய ஒரு நாள் சம்பளம் 40,000.

Trending News