சன் டிவி சீரியலால என் வாழ்க்கையே போச்சு.. சூட்டிங் ஸ்பாட்டில் நடிகரின் மனைவி வாக்குவாதம்

Sun Tv: சீரியல் என்றாலே சன் டிவி தான். 90 காலகட்டத்தில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த பெருமையும் சன் டிவிக்கு உண்டு.

ஆனால் இப்போது அடுக்கடுக்காக போட்டி சேனல்கள் வந்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதனால் டிஆர்பியில் யார் முதலிடம் என்ற போட்டி இருக்கிறது.

இருப்பினும் சன் டிவி சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் பேவரைட். அதில் கயல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

வருட கணக்கில் கதையை உருட்டி கொண்டிருந்தாலும் அதை உட்கார்ந்து பார்க்கும் தாய்மார்களும் உண்டு. அந்த சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஐயப்பன்.

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகரின் மனைவி வாக்குவாதம்

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் இவர் நடிகரானார். தற்போது கயல் சீரியலில் நடித்து வரும் இவர் மீது அவருடைய மனைவி அடுக்கடுக்கான புகார்களை வைத்துள்ளார்.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் குடும்பத்தை கவனிக்காமல் பொறுப்பற்று திரிபவராக இருந்தது. தற்போது அவர் மாறி தங்கைக்கு உதவியாக இருப்பது போல் கதை நகர்கிறது.

சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்தில் கூட இவர் அப்படித்தான் என்பது மனைவி மூலம் தெரிய வந்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

வீட்டிற்கு சரியாக காசு கொடுக்காமல் குழந்தையையும் கவனிக்காமல் இருந்திருக்கிறார். தற்போது 20 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. எனக்கு ஒரு நியாயம் வேண்டும் என அவர் மனைவி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் அவரை அங்கு உள்ளே விட மறுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். தற்போது மீடியாக்களிடம் பேசி இருக்கும் அவர் இந்த சீரியலால் என் வாழ்க்கையே போச்சு.

நாங்க எப்படியோ பொழைச்சுக்குறோம். இந்த சீரியல் வேண்டவே வேண்டாம் என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சீரியல்களால் பல குடும்பம் அழிந்து வருகிறது என நெட்டிசன்கள் கிண்டலாக கூறுவது உண்டு.

ஆனால் தற்போது நடிகரின் மனைவியே இப்படி கண்ணீருடன் புகார் கொடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சீரியல் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்