புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முக்கிய சீரியல்களின் நேரத்தை மாற்றிய சன் டிவி.. விஜய் டிவியை காப்பி அடித்த புத்தம் புது சீரியல்

Sun TV which changed the time of 4 serials: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களை பார்ப்பதற்கு குடும்பத்தின் இல்லத்தரசிகள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதிலும் சன் டிவி சீரியல் என்றாலே அதை கொஞ்சம் கூட மிஸ் பண்ணாமல் தொடர்ந்து பார்க்கிறார்கள்.

ஒருவேளை டிவியில் பார்க்க முடியவில்லை என்றாலும் மொபைலில் பார்த்த பிறகு தான் அடுத்த வேலை என்று சொல்லும் அளவிற்கு சீரியல்களுக்கு பேவரைட் ஆகிவிட்டார்கள். அந்த வகையில் மாலை முதல் இரவு ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்திருக்கிறது.

அப்படிப்பட்ட முக்கிய சீரியல்களின் நேரத்தை தற்போது சன் டிவி மாற்றி இருக்கிறது. அதற்கு காரணம் புத்தம் புது சீரியல் வர இருப்பதால் இந்த அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வருகின்ற அன்பே வா சீரியல் தற்போது கிளைமாக்ஸ்க்கு நெருங்கிவிட்டது.

புத்தம் புதுசாக வரும் மல்லி சீரியல்

அதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த நாடகத்தின் ஒட்டுமொத்த கிளைமாக்ஸ் ஒளிபரப்பு ஆகப் போகிறது. இதனை தொடர்ந்து வழக்கம்போல் 9 மணிக்கு எதிர்நீச்சல் ஒளிபரப்பாகும். அடுத்து 9.30 மணிக்கு மல்லி சீரியல். 10 மணிக்கு இனியா மற்றும் 10.30 மிஸ்டர் மனைவி ஒளிபரப்பாக போகிறது.

மேலும் இதில் புதுசாக வரும் மல்லி சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நீலி என்ற நாடகத்தின் காப்பி கதையாக இருக்கப் போகிறது. அத்துடன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலின் கதையும் கொஞ்சம் சேர்த்து கலவையாக இருப்பதாக தெரிகிறது.

அதாவது அம்மா இல்லாத பெண் குழந்தைக்கு ஆதரவாக இருக்கும் ஹீரோ விஜய். இவர்களுக்கு நடுவில் ஹீரோயினாக புதுசாக வரப்போகும் அம்மா. இவர்களை சுற்றி கதை நகர போகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நளினி கமிட் ஆகி இருக்கிறார்.

அப்படிப்பட்ட இந்த நாடகம் பிரேம் டைமான 9.30 மணிக்கு வருவதால் மக்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News