வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஒய்யாரத்தில் ஜொலிக்கும் சன் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. விஜய்யை சொக்க வைக்கும் மல்லியின் ஆட்டம்

Sun tv Top 5 Serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பை அதிகரித்து மக்களை சீரியலுடன் ஒன்று இணைக்க வைக்கும். அந்த அளவிற்கு சீரியலின் சிம்ம சொப்பனமாக புதுப்புது சீரியல்களை உள்ளே கொண்டு வந்து வேறு எங்கும் போகாதபடி மக்களை கவர்ந்து வருகிறது. அப்படி சன் டிவியில் மக்களின் பேராதரவை பெற்று வரும் சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.

சூடு பிடிக்கும் மல்லி மருமகள் சீரியல்கள்

மல்லி: விஜய்யை கல்யாணம் பண்ணி வெண்பாவிற்கு சித்தியாக மாற வேண்டும் என்று நிஷா மல்லியை கடத்திவிட்டார். கடத்தியதோடு மட்டுமல்லாமல் விஜய் மற்றும் வெண்பாவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால் கையெழுத்து போட மறுத்த மல்லி, யாருக்கும் தெரியாமல் விஜய்க்கு வீடியோ கால் பண்ணி இருக்கும் இடத்தை காட்டி கொடுக்கிறார். அதன்படி விஜய் அங்கே வந்து சண்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் விஜய்க்கு அடிபட்டது என்று தெரிந்தது. மல்லி களத்தில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தூள் கிளப்பி விடுகிறார்.

மருமகள்: கண்முன்னே யாருக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் அதை சரி பண்ண முதல் ஆளாக ஆதிரை நுழைந்து தாராள பிரபுவாக உதவி பண்ணுகிறார். இவருக்கு எதிர் மாறாக ஒரு ரூபாய் இருந்தாலும் அதற்கு கணக்கு கேட்கும் மகாகஞ்சனாக பிரபு இருக்கிறார். வழக்கம்போல் இவர்களுக்கிடையே வந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி இவர்கள் எப்படி வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்பதை காட்டும் விதமாக கதை நகர்ந்து வருகிறது.

கயல்: இதுவரை சிங்க பெண்ணாக இருந்து குடும்பத்திற்காக அனைத்து பாரங்களையும் சுமந்து வந்த கயல் எழில் விஷயத்தில் ரொம்பவே முடங்கி போய்விட்டார். குடும்பத்தின் ஆசைப்படி நிச்சயதார்த்தம் எழிலுடன் முடிந்த கையோடு ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனையை தெரிந்து கொண்டு எழிலை விட்டு விலக ஆரம்பிக்கிறார். இதனால் அவ்வப்போது துவண்டு போய் இருக்கும் கயல் நிலைமையை தமக்கு சாதகமாக மாற்றி குடும்பத்தை அடிமையாக வேண்டும் என்று பெரியப்பா பிளான் பண்ணி விட்டார்.

சிங்க பெண்ணே: அன்புக்கும் ஆனந்திக்கும் மனதளவில் ஒற்று போனாலும் அன்பு மனதில் இருக்கும் காதலை ஆனந்தியிடம் சொல்லவில்லை. அதே மாதிரி ஆனந்தி தன்னுடைய காதலன் அழகன் தான் என்ற முடிவுடன் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இடையில் இருக்கும் காதலை மித்ரா உணர்ந்து கொண்டு அதன் மூலம் பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்று மகேஷிடம் போட்டுக் கொடுக்கிறார். இதுவரை சாதுவாக இருந்த மகேஷ், அன்பு ஆனந்தி இடையே விரிசலை உண்டாக்கும் விதமாக காய் நகர்த்தப் போகிறார்.

ராமாயணம்: ஒரே மாதிரி நாடகத்தை பார்த்து போர் அடிக்குது வித்தியாசமான அதுவும் அந்த காலத்து கதைகளை கேட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு ஏற்ப சன் டிவியில் வரும் நாடகம் தான் ராமாயணம். எப்பொழுதுமே இதே மாதிரியான தொடர்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும். அதே மாதிரி இந்தத் தொடர் மக்களை கவர்ந்து, விடாமல் பார்க்கும் படி காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

சன் டிவியின் முக்கியமான சீரியல்கள்

Trending News