சுந்தர் சி மற்றும் வடிவேலு பல போராட்டங்களுக்குப் பிறகு இப்பொழுது ஒரு படத்தில் இணைந்து செயல்படுகின்றனர். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் கூட்டணி இணைகிறது. வின்னர் தலைநகரம், நகரம் மறுபக்கம், ரெண்டு என சுந்தர்சி படங்களில் காமெடியில் பட்டையை கிளப்பியவர் வடிவேலு.
ஒரு காலத்தில் கவுண்டமணி உடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வெற்றி படங்களை கொடுத்தார் சுந்தர்சி, அதன்பின் வடிவேலு. இருவருக்கும் அப்புறம் சந்தானம் இப்பொழுது யோகி பாபு என ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொண்டே வந்தார் சுந்தர் சி.
வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவருக்கும் மாதவனின் ரெண்டு படத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அந்த படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்தது வடிவேலுவிற்கு பிடிக்கவில்லை. இதனால் பிரச்சனை செய்த வடிவேலு சுந்தர் சி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இப்பொழுது மீண்டும் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி 14 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் தென்காசி மற்றும் அம்பை சுற்றுவட்டாரங்களில் நடந்து வருகிறது. இதற்காக 45 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார் வடிவேலு.
முருங்க மரம் ஏற ரெடியாகும் வடிவேலு
ஆனால் இந்த படத்திலும் சுந்தர் சிக்கு யோகி பாபுவை நடிக்க வைக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. அவருக்காக காமெடி சீக்வன்சும் ஏற்கனவே எழுதி வைத்து விட்டாராம். பழைய வடிவேலு, சந்தானம் பஞ்சாயத்தே இப்போது தான் தீர்ந்துள்ளது மறுபடியும் வடிவேலுவுடன் யோகி பாபுவை ஒட்ட வைக்கிறார் சுந்தர் சி.
இதனால் பழைய வேதாளமாக வடிவேலு மாறி முருங்கை மரம் ஏறுவதற்கு வழி செய்கிறார் சுந்தர் சி. யோகி பாபு, வடிவேலுவுடன் கூட்டணி போடுவது ஏணியை வேதாளத்திடம் கொடுத்து எளிதாக முருங்க மரமேற வழி செய்வது போன்றதாகும் என்பதை சுந்தர் சி புரிந்து கொண்டால் சரிதான்.
- சுந்தர் சி-யால் மீண்டு வந்த கோலிவுட்
- அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி
- ஐட்டம் நடிகை என்ற பெயரை தவிடு பொடி ஆக்கிய சுந்தர் சி