வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுந்தர் சி, லாரன்ஸ் கூட ஜோடி போட்டு சோலியை முடித்த 5 நடிகைகள்.. ஆடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாத பரிதாபம்

Sundar C and Lawrance Movie Actress: பொதுவாக நடிகைகள் சில படங்களிலேயே பிரபலமாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தால் முன்னணி ஹீரோயின்களாக மாறிவிடுகிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அப்படி வாய்ப்பு இல்லை என்றால் அடுத்த கட்டமாக கவர்ச்சியை காட்டும் விதமாக ஐட்டம் டான்ஸில் இறங்கி விடுகிறார்கள்.

அப்படி சில நடிகைகள் வாய்ப்பில்லாமல் போனதால் ஆடையை குறைத்து தன்னுடைய மார்க்கெட்டை அதிகரிக்க செய்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் யார் என்று தற்போது பார்க்கலாம். இதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம் சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் இவர்களுக்கு ஜோடியாக நடித்த பிறகு தான் அந்த நடிகைகளுடைய கேரியரே பரிதாபமாக போய்விட்டது.

Also read: மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்.. இன் கார் பட ப்ரோமோஷனில் கண்கலங்கியதால் பரபரப்பு

அதில் ரித்திகா சிங் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இறுதி சுற்று என்ற படத்தில் அறிமுகமானார். தற்காப்பு கலையை தெரிந்ததால் எதார்த்தமான நடிப்பை இவரால் கொடுக்க முடிந்தது. அதன் பின் லாரன்ஸுக்கு ஜோடியாக சிவலிங்கம் என்ற படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் தற்போது மலையாள படமான கிங் ஆப் கோதா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

அடுத்ததாக பூனம் பஜ்வா தமிழில் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர் சுந்தர் சி-க்கு ஜோடியாக அரண்மனை 2 என்ற படத்தில் நடித்தார். ஆனாலும் இவரை தேடி எந்த வாய்ப்புகளும் வராததால் விஷாலுடன் ஆம்பள படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். அடுத்து நடிகை ஓவியா பிக் பாஸ்க்கு சென்று மிகவும் பிரபலமானார்.

Also read: இளசுகளை கெடுத்து, மனதில் நஞ்சை பதிய வைத்த 5 படங்கள்.. பேரை கெடுத்துக் கொண்ட ஓவியா

ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இவரால் நடிகையாக வலம் வர முடியவில்லை. இதனால் ஆடையை குறைத்து 90 எம் எல் படத்தில் நடித்திருப்பார். அடுத்ததாக நடிகை வேதிகா முனி, பரதேசி, போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் தற்போது இவர் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை கதாநாயகியும் தாண்டி கவர்ச்சி டான்சில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அடுத்ததாக ஹன்சிகா அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்களை சம்பாதித்தார். அப்படிப்பட்ட இவருக்கு திருமணத்திற்கு பிறகு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாது தான், தற்போது எந்த அளவுக்கு இவருடைய ஆடையை குறைத்து படங்களில் நடிக்க முடியுமோ அதற்கு ஏற்ற மாதிரி நடித்து வருகிறார்.

Also read: கல்யாணத்துக்கு வேணாம் ஆனா அந்த விஷயத்துக்கு மட்டும் வெளிச்சம் போடணுமா.. ஹன்சிகாவை வெளுத்து வாங்கிய பயில்வான்

Trending News