14 வருடங்களுக்கு அப்புறம் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் புதிதாய் உருவாகியுள்ள கேங்கர்ஸ் படத்தில் இருவரும் அதகளபடுத்தியுள்ளனர். தற்சமயம் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. பழைய வடிவேலுவை இதில் பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு சுந்தர் சி அவரை மாற்றிவிட்டார்.
சுந்தர் சி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வடிவேலு, முனீஸ் காந்த், சந்தான பாரதி, ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம் புலி, இளவரசு, வெங்கல் ராவ் என படத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றார்கள். முழு நீள நகைச்சுவை படமாக இதை இயக்கி உள்ளார்.
ஆபரேஷன் சிங்காரம் என்ற திட்டப்படி இவர்கள் படத்தில் 100 கோடி ரூபாயை கொள்ளையடிப்பது போல் காட்சிகளை அமைத்திருக்கிறார் சுந்தர் சி. வடிவேலு இதில் நாலைந்து கெட்டப்புகளில் தோன்றி டிரைலரிலேயே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனால் படத்தை பார்க்கும் ஆர்வம் இப்பவே பற்றிக்கொண்டது.
குறிப்பாக வடிவேலு பேசும் போது “கழுத்துக்கு கீழே யோகா பண்றேன்” என்ற வசனம் சிரிப்பளைகளை வர வைக்கிறது. சுந்தர் சி எப்பொழுதும் விட்டுக் கொடுக்காத அதே நடிகர்களை வைத்து இந்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக்கி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
சந்தான பாரதி, விச்சு விஸ்வநாத் போன்ற நடிகர்கள் சுந்தர் சி இன் எல்லா படங்களிலும் இருப்பார்கள். மற்ற படங்களைப் போல் இந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளனர். காலேஜ் பி டி மாஸ்டர், சார்லஸ், பெண் வேடம் என பல கெட்டப்பில் வடிவேலு இதில் நடித்து அசத்தியுள்ளார்.