ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Aranmanai 4 Movie Review: மனித சக்திக்கு அடங்காத பாக், மிரட்டும் அமானுஷ்யம்.. அரண்மனை 4 எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Aranmanai 4 Review: கோடை விடுமுறை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. அதில் இன்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அரண்மனை 4 வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மூன்று பாகங்கள் வந்த நிலையில் இது எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. அதையே ஒரு சவாலாக எடுத்து இப்படத்தை கொடுத்திருக்கும் சுந்தர் சி அதில் ஜெயித்தாரா? என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.

சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா காதலித்து வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்கிறார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது.

மிரட்டும் அமானுஷ்யம்

மேலும் தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் நெஞ்சு வலியால் உயிரிழக்கிறார். அதையடுத்து தங்கையின் வீட்டுக்கு செல்லும் சுந்தர் சி இந்த மரணங்களின் பின்னணியை கண்டுபிடித்தாரா? தங்கை மகளை கொல்லும் பேய் யார்? அந்த வீட்டில் என்னை நடக்கிறது? போன்ற பல கேள்விகளுக்கு அரண்மனை 4 விடையளிக்கிறது.

வழக்கமாக சுந்தர் சி படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் இதிலும் விடிவி கணேஷ், கோவை சரளா, யோகி பாபு, லொள்ளு சபா சேசு என பலரின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

மேலும் கிளாமர் குயினாக நாம் பார்த்த தமன்னா இதில் அட்டகாசமான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். இதுவே படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.

ஸ்கோர் செய்த சுந்தர் சி

ஆனால் ராஷி கண்ணாவுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. முந்தைய பாகங்களில் இருக்கும் கிளாமர், பிளாஷ்பேக் போன்ற சமாச்சாரங்களை சுந்தர் சி இதில் தவிர்த்து இருக்கிறார்.

அதுவே கூடுதல் சிறப்பாக இருக்கிறது. அதேபோல் மிரட்டும் பின்னணி இசை, அந்த வீடு, பெரிய காடு அனைத்துமே ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. அதிலும் இடைவெளிக்கு முன்பு வரும் காட்சிகள், படத்தின் இறுதியில் குஷ்பூ, சிம்ரன் நடனம் என சுந்தர் சி ஸ்கோர் செய்திருக்கிறார்.

இதில் சிறு சிறு விஷயங்கள் குறையாக இருந்தாலும் படத்தோடு நம்மை ஒன்றை வைத்து ரசிக்க வைத்திருக்கிறது இந்த அரண்மனை 4. ஆக மொத்தம் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக இது இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Trending News