புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Aranmanai 4: ஆஹா சுந்தர் சி பார்ட் 5 ஆரம்பிச்சிடுவாரு போலயே.. மூன்றே நாளில் வசூலை வாரி குவித்த அரண்மனை 4

Aranmanai 4: சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த வாரம் வெளியானது. இதற்கு முன்பு வெளியான பாகங்களில் மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதனாலேயே இதை வெற்றி பெற வைக்க வேண்டும் என சுந்தர் சி பயங்கர ப்ரமோஷன் செய்தார். அதில் தமன்னா, ராசி கண்ணா இருவரும் கிளாமர் உடையில் பேட்டி கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க அச்சச்சோ பாடலில் உச்சகட்ட கிளாமரில் அவர்கள் போட்ட ஆட்டமும் ஒரு பிரமோஷன் ஆக அமைந்தது. அதனாலேயே படத்தின் முதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து வந்த விமர்சனங்களும் வசூலுக்கு பக்க பலமாக அமைந்தது. அதன்படி முதல் நாளில் 5 கோடியை அரண்மனை 4 வசூலித்தது.

வசூல் வேட்டையாடும் அரண்மனை 4

இரண்டாம் நாளில் 7 கோடியை தாண்டிய நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 கோடியை வசூலித்து இருக்கிறது. அதன்படி மூன்று நாட்களில் 23 கோடியை சுந்தர் சி வாரிசு சுருட்டி இருக்கிறார்.

இது தமிழக அளவில் கிடைத்த வசூல் தான். இதே போன்று உலக அளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி அரண்மனை 4 உலக அளவில் 34 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.

இதனால் இப்போது படத்தை தயாரித்த குஷ்பூ, சுந்தர் சி இருவரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். ஏற்கனவே இப்படம் வெற்றி பெற்றால் அடுத்த பாகம் பற்றி யோசிப்போம் என கூறியிருந்தனர்.

இதை வைத்து பார்க்கும் போது சுந்தர் சி அடுத்த மாதமே 5ம் பாகத்துக்கு பூஜை போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது கோடை விடுமுறை என்பதால் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News