ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Aranmanai 4 – கவின், தாஸால் தடுமாறுமா அரண்மனை 4.? 7 நாட்களில் செய்த கலெக்சன் ரிப்போர்ட்

மே 10ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் கவினின் ஸ்டார், அர்ஜுன் தாஸின் ரசவாதி மற்றும் அமீரின் உயிர் தமிழுக்கு ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான அரண்மனை 4 படம் வெளியானது. 

இந்நிலையில் புது படங்களின் வரவால் அரண்மனை படத்தின் வசூல் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சுந்தர் சியின் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அரண்மனை 4 படம் பெற இருக்கிறது.

இதற்கு முன்பு வெளியான மூன்று பாகங்களை விட இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதன்படி ஒரு வாரத்தை கடந்த நிலையில் அரண்மனை4  படம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 40 கோடி வசூல் செய்திருக்கிறது. 

ஒரு வாரம் கடந்த அரண்மனை4 வசூல்

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 கோடி கலெக்ஷனை தொட்டுள்ளது. ஏழு நாட்களில் 50 கோடி வசூலை தொட்டுள்ளது படக்குழுவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் கவினின் ஸ்டார் இன்று வெளியாகி உள்ள நிலையில் இப்படம் இரண்டு கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அர்ஜுன் தாஸின் ரசவாதி படமும் 75 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்யும் என யூகிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரண்மனை 4 படம் அளவுக்கு இரண்டு படங்களுமே இருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் ஸ்டார் மற்றும் ரசவாதி இரு படங்களுமே ஓரளவு கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆகையால் அரண்மனை 4 படத்தை இந்தப் படங்கள் பாதிக்க வாய்ப்புகள் குறைவுதான். இதனால் 100 கோடி கிளப்பில் அரண்மனை 4 விரைவில் இணையும்.

Trending News