Director Changed his idea: சுந்தர் சி ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். அரண்மனை 4 அடித்த ஜாக்பாட்டால் படு குஷியாக இருக்கிறார். இந்த கோடை காலம் முடிந்த பின்பு தான் இந்தியா திருப்புகிறாராம். அரண்மனை 4 கொடுத்த வசூலால் ஆடிப் போய் உள்ள சுந்தர் சி அடுத்தடுத்து பல ப்ராஜெக்டுகளை தூசி தட்டுவதாக இருந்தார்.
கலகலப்பு படம் அவருக்கு நல்லதொரு வசூலை கொடுத்தது. அதன் பின் இரண்டாம் பாகத்தை எடுத்தார், அதுவும் ஓரளவு நல்ல லாபத்தை பெற்று தந்தது. தொடர்ந்து ஹாரர் படங்கள் வேண்டாம் என்று அடுத்ததாக கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார்
கலகலப்பு 3 படத்திற்காக ஆர்டிஸ்ட்களையும் தேர்வு செய்து விட்டார். மிர்ச்சி சிவா, யோகி பாபு போன்றவர்களை முதலில் கமிட் செய்து வைத்திருந்தார். இப்பொழுது அந்த படத்தையே டிராப் செய்கிறார். இந்த மாற்றத்திற்கு எல்லாம் முக்கிய காரணம் அரண்மனை4 அடித்த ஜாக்பாட் தான்.
அரண்மனை 4 கிட்டத்தட்ட 50 கோடி வரை லாபம் பார்த்து விட்டது. இதனால் பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லோரும் சுந்தர் சி, நமக்காக கதை பண்ணுவாரா அவரை அணுகலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். சுந்தர் சி இடமும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள். அதனால் சுந்தர் சி வேறு ஒரு யோசனையில் இறங்கியுள்ளார்.
பழைய படங்களின் இரண்டாம் பாகம் வேண்டாம், பெரிய ஹீரோக்கள் மற்றும் நல்ல மார்க்கெட்டும் நம் கையில் இருக்கிறது, இதனால் இதை அப்படியே பிடித்துக் கொண்டு புது படங்களை எடுக்கலாம் என கலகலப்பு 3 படத்தை ட்ராப் செய்துவிட்டார். இப்பொழுது ஹீரோக்கள் முடிவு செய்யாமல் புதுக்கதை எழுதி வருகிறார்.
- அரண்மனை 4 வெற்றிக்கான ஆறு காரணங்கள்
- கோலிவுட்டை தலை நிமிர்த்தினாரா சுந்தர் சி
- அரண்மனை 4ஆம் பாகத்தால் ஹிப் ஹாப் ஆதிக்கு அடித்த ஜாக்பாட்