Sundar C : இயக்குனர் சுந்தர் சி கடைசியாக இயக்கிய அரண்மனை 4 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு வசூலும் வாரி குவித்த நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் முதல் வெற்றி படமாக அரண்மனை 4 படம் கொண்டாடப்பட்டது.
அடுத்ததாக அவர் இயக்கும் படத்தின் பெயர் கேங்கர்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனென்றால் வின்னர் படத்தில் வடிவேலுக்கு கைப்புள்ள என்ற கதாபாத்திரத்தை சுந்தர் சி உருவாக்கி இருந்தார்.
இன்றளவும் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதேபோல் தலைநகரம் மற்றும் நகரம் போன்ற படங்களில் வடிவேலுவின் காமெடிக்கு சுந்தர் சி உயிர் கொடுத்திருப்பார். அவ்வாறு கைப்புள்ள, வீரபாகு கேரக்டர் மாதிரி இப்போதும் வடிவேலுக்கு ஒரு கேரக்டர் கிடைத்திருக்கிறது.
கேங்கர்ஸ் பஸ்ட் லுக் போஸ்டர்
சுந்தர் சி மற்றும் வடிவேலு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் இடையில் படம் பண்ணாமல் இருந்ததாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. இந்த சூழலில் இப்போது இந்த கலக்கல் காமெடி கூட்டணி மீண்டும் கேங்கர்ஸ் படத்தில் இணைந்து இருக்கிறது.
இப்படத்தில் கேத்தரின் தெரசா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் குஷ்புவின் அவினி ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. இன்று வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.
அந்த போஸ்டரில் எலியும் பூனையும் ஆக சுந்தர் சி மற்றும் வடிவேலு இருவரும் உள்ளனர். அரண்மனை 4 படத்தை தொடர்ந்து கேங்கர்ஸ் படமும் சுந்தர்சிக்கு மாபெரும் வெற்றியை பெற்று தரும் என அவரது ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.
கம்பேக் கொடுத்த சுந்தர் சி
- சுந்தர் சி, வடிவேலுக்கும் சூனியம் வச்சாச்சு
- உண்மையான வெற்றிக்கனியை ருசித்த சுந்தர் சி
- சுந்தர் சி, லாரன்ஸ் 2 பேரையும் ஓரங்கட்டிய டிமான்டி ஞானமுத்து