புதன்கிழமை, ஜனவரி 8, 2025

3 வருடங்களாக தலை காட்ட முடியாமல் போன 37 வயது நடிகை.. காட்டிய கவர்ச்சியில் மயங்கி வாய்ப்பு கொடுத்த சுந்தர் சி

அழகிற்கு பஞ்சமில்லாத ஒரு நடிகை, மூன்று வருட காலமாக எந்த ஒரு தமிழ் படங்களிலும் தலை காட்டாமல் இருக்கிறார். எப்பொழுதுமே சுந்தர் சி படங்களில் அவரை பார்க்கலாம். அவர் மட்டுமே நடிகைக்கு ஓரளவு வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.

அதுவும் இப்பொழுது இல்லை. அவர் சங்கமித்ரா படம் எடுப்பதாக சிறிது காலத்தை கடத்தி விட்டார். இப்பொழுது அம்மணி என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக ஜிவி பிரகாஷ் உடன் குப்பத்து ராஜா என்ற படத்தில் 2019 ஆண்டு நடித்தார் பூனம் பஜ்வா.

Also Read: மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

அதன் பின் தமிழ் சினிமாவில் இப்பொழுது வாய்ப்புகள் இல்லை. 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா முதல் படத்திலேயே ரசிகர்களை சுண்டி இழுத்து வசியம் செய்தார்.

அதன் பிறகு ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு கச்சேரி, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமானார். அதிலும் கச்சேரி ஆரம்பம் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து பூனம் பஜ்வாவுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்தது.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த பூனம் பஜ்வாவிற்கு ஒரு கட்டத்தில் கதையை எப்படி தேர்வு செய்வது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டு, வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.

Also Read: சுந்தர் சி இயக்கிய 35 படங்களில் நடித்த ஒரே நடிகர்.. 2 படங்களை மட்டும் மிஸ் செய்த காரணம் இதுதான்

அதிலும் சோசியல் மீடியாவில் இவர் பதிவிடும் எக்குத்தப்பான புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்களில் எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகுதான் என நெட்டிசன்களும் வர்ணிக்கின்றனர்.

இதனால் சோசியல் மீடியாவில் 37 வயதிலும் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் பூனம் பஜ்வாவுக்கு, சுந்தர் சி தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு வாய்ப்பை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவரும் வாய்ப்பு கொடுக்காததால் பூனம் பஜ்வாவின் நிலை படுமோசமானது.

Also Read: கவர்ச்சியை ஆயுதமா வச்சு மண்ணை கவ்விய 6 நடிகைகள்.. காட்டுனா போதுமா.! கொஞ்சமாச்சும் நடிக்கணும்

Trending News