வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மசாலா படம் வேண்டாம்னு சுந்தர்சி-யை கழட்டிவிட்ட வளரும் ஹீரோ.. வெற்றிமாறனுடன் இணையும் ரொமான்டிக் நடிகர்

Sundar. C: சினிமாவில் இரண்டு விதமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒன்று கதைகளை எழுதி அமைத்த பின் அதில் எந்த ஹீரோ ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து அவர்களை தேடி போவார்கள். இன்னொன்று நடிகர் நடிகைகளை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்காக கதையே எழுதும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். இதில் இயக்குனர் சுந்தர் சி, முதல் ரகத்தை சேர்ந்தவர்.

முதலிலேயே கதையை ரெடி பண்ணி எழுதிய பிறகு, இதில் எந்த ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில நடிகர்களின் பெயரை லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்வார். அப்படி தற்போது சுந்தர் சி எடுக்க நினைக்கும் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து வைத்து விட்டார்.

அந்த வகையில் இந்த கதையில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார். அதன்படி அவரிடம் சுந்தர் சி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால் கவின், நான் இப்பதான் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து அதில் நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

Also read: சுந்தர் சி, லாரன்ஸின் சொத்து மதிப்பு.. 10 படங்கள் வரை எடுக்க நிரம்பி வழியும் கஜானா

அந்த வகையில் எனக்கு ரொமான்டிக் மற்றும் காதல் படங்கள் ரொம்பவே கை கொடுத்து வருகிறது. ஆனால் நீங்கள் எடுக்கக்கூடிய படமோ மசாலா படம், ஒருவிதமான காமெடி கலந்த கதையாக இருக்கும். அதனால் எனக்கு இது செட்டாகாது, மசாலா படங்களில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமும் இல்லை என்று சொல்லி சுந்தர் சி-யை கழட்டி விட்டார்.

அது மட்டும் இல்லாமல் கவின் இப்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படமும், இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குனர் விக்ரனன் அசோகன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் கவின் கமிட் ஆகியுள்ளதால் சுந்தர் சி படத்தை ரிஜெக்ட் பண்ணி விட்டார். இதனால் சுந்தர் சி, இயக்கப் போகும் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிப்பதற்கு மற்றொரு ஹீரோவை நாடிப் போய் இருக்கிறார். இதற்கிடையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Also read: குஷ்பூ மேரேஜ் பண்ண ஆசைப்பட்ட 3 பிரபலங்கள்.. மிரட்டலுக்கு பயந்து சுந்தர் சி யை கல்யாணம் பண்ணிய பரிதாபம்

Trending News