திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் புலம்பி வரும் சுந்தர் சி.. 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பிரம்மாண்ட படம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக அதில் நடித்த பல நடிகர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 1000 கோடி வரை வசூலை அள்ளியது. இப்படத்தின் பாகம் 2 அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகும் என ரிலீஸ் தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணிரத்னத்தை தொடர்ந்து வரலாற்று கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் களம் இறங்கியுள்ளனர். உதாரணமாக சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா வேள்பாரி நாவலை தழுவி ஒரு படத்தை இயக்க ஆயத்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் ஷங்கரும் பிரமாண்டமான பட்ஜெட்டில் வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

Also Read : பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்னம்.. அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்பாக இயக்குனர் சுந்தர். சி 2017 ஆம் ஆண்டிலிருந்து வரலாற்று படத்தை இயக்க ஆர்வமாக உள்ளார். இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இந்தாண்டு வெளியான காஃபீ வித் காதல் திரைப்படம் பெரும் தோல்வியடைந்தது. இதனிடையே தனது அடுத்த படத்தை சயின்ஸ் பிக்ஷன் படமாக இயக்க லைக்கா நிறுவனத்திடம் சுந்தர் சி பேசி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சங்கமித்ரா படத்தை 2023 ஆம் ஆண்டிலிருந்து படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கப்படவுள்ளாராம் சுந்தர் சி. இப்படத்தில் ஏற்கனவே ஆர்யா, ஜெயம்ரவி முக்கிய கதாபாத்திரத்திலும்,  நடிகை மாளவிகா மோகன் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் ஜெயம் ரவியின் மார்க்கெட் சற்று உயர்ந்துள்ளது.

Also Read : ரெடியான உள்ளத்தை அள்ளித்தா பார்ட்-2 கதை.. எதிர்பாராமல் சுந்தர்.சி எடுத்த முடிவு

இதன் காரணமாக ஜெயம்ரவி தனது சம்பளத்தை அதிகரித்து கேட்டு வருகிறாராம். மேலும் ஆர்யாவும் சம்பளத்தை அதிகரித்து கேட்டு வருவதால் சுந்தர். சி க்கு தலைவலியாய் உள்ளதாம். ஏனென்றால் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், பிரமாண்டமான செட்டுகளுக்கே 500 கோடிவரை செலவாக உள்ளதாம். இப்படம் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு மேலாக தள்ளிபோய்க் கொண்டே உள்ள நிலையில், சுந்தர். சிக்கு தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளாராம்.

ஜெயம் ரவி,ஆர்யா இருவரும் பல படங்களில் தற்போது கமிட்டாகி வந்தாலும், சங்கமித்ரா படத்தில் நடிக்க பெரும் ஆர்வத்துடன் உள்ளார்களாம். மேலும் தங்களது தற்போதைய மார்க்கெட்டை பயன்படுத்தி சம்பாரிக்கலாம் என்ற முடிவில் இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கெல்லாம் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து வெற்றிக் கொடுத்தது தான் காரணம் என சுந்தர்.சி புலம்பி வருகிறாராம்.

Also Read : ஜெயம் ரவியின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுந்தர்.சி

Trending News