வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுந்தர் சி க்கு ஆப்பு வைத்த ஹீரோ.. பத்து வருடங்களாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம்

இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றால் காமெடிக்கும்,கவர்ச்சிக்கும் குறையே இருக்காது. படத்தில் கதை இருக்கிறதோ,இல்லையோ இது இரண்டும் கட்டாயம் இருக்கும்.

இதன் காரணமாகவே சுந்தர்.சியின் திரைப்படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறும். இதனிடையே தற்போது வல்லான்,தலைநகரம் 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி, பத்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

Also read:சுந்தர் சி இயக்கிய 35 படங்களில் நடித்த ஒரே நடிகர்.. 2 படங்களை மட்டும் மிஸ் செய்த காரணம் இதுதான்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் , வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில், 2013ஆம் ஆண்டு வெளியாக இருந்த மதகஜராஜா திரைப்படம், பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடியாத நிலையில், மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என சுந்தர் சி பிளான் செய்துள்ளார்.

ஆனால் நடிகர் விஷால் தற்போதுள்ள சூழ்நிலையில் சுந்தர்.சியுடன் இணைந்து மதகஜராஜா திரைப்படத்தை நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.ஏனென்றால் அண்மையில் விஷாலின் நடவடிக்கை எதுவும் சரியில்லாமல் உள்ளது.உதாரணமாக படத்தின் ஷூட்டிங்குக்கு விஷாலை அழைத்தால் வீட்டில் படுத்து தூங்குவது, படத்தில் நடிப்பதற்கு முன்பணத்தை வாங்கிவிட்டு படத்தில் நடிக்காமல் இருப்பது என விஷால் மீது பல தயாரிப்பாளர்களும் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

Also read:சங்கமித்ரா தான் போச்சு.. ஈடாக சுந்தர் சி கையில் எடுத்த புது அஸ்திரம்

அதுமட்டுமில்லாமல் சந்தனமும் மதகஜராஜா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்,ஆனால் இப்போது சந்தானம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடித்து வருகிறார். இதனிடையே மதகஜராஜா திரைப்படத்தின் மறு படப்பிடிப்பு எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

இருந்தாலும் சுந்தர்.சி இப்படத்தை எப்படியாவது மீண்டும் எடுத்து ஓடிடியில் ரிலீஸ் பண்ணலாம் என்றும் பிளான் செய்துள்ளார்.ஆனால் விஷாலும்,சந்தானமும் மனம் வைத்தால் மட்டுமே இப்படத்தை எடுக்கமுடியும். ஏற்கனவே விஷால்,சந்தானம் இருவரும் சுந்தர்.சியின் ஆம்பள திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read:சினிமாவில் நிரந்தர இடம் பிடிப்பதற்காக படாத பாடுபடும் நடிகை.. சுந்தர் சி மட்டுமே வாய்ப்பு அளிக்கிறார்

Trending News