வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

2வது இன்னிங்ஸில் வடிவேலு முதல் முதலா இணைய போகும் ஹீரோ.. ரூட் போட்டுக் கொடுத்த சுந்தர் சி

வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். சுந்தர் சியுடன் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் சியுடன் இம்முறை வடிவேலு இணைவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து வடிவேலு காமெடி கௌபாய் மாரிசன் போன்ற படங்களில் நடிக்கிறார். நீண்ட நாட்கள் மன கசப்பு காரணமாக அவர் சுந்தர் சி யுடன் இணையவில்லை. இப்பொழுது பழைய சம்பவங்களை மறந்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

கேங்கர்ஸ் படத்தை சுந்தர் சி இயக்கி ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். ஏற்கனவே சமீபத்தில் அவரது படம் மதகஜராஜா வெளிவந்து சக்க போடு போட்டது. இதனால் இந்த படத்திற்கும் வியாபார ரீதியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலு இப்பொழுது முதல் முதலாக ஹீரோ ஒருவருடன் இணைகிறார். எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்த அவர் இப்பொழுது பருத்திவீரன் கார்த்தி உடன் முதல் முதலாக நடிக்க உள்ளார். இதனால் கார்த்தி இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வா வாத்தியாரே, சர்தார் 2 போன்ற படங்களில் கமிட்டாகி இருக்கும் கார்த்தி அடுத்து டானாகாரன் பட இயக்குனர் தமிழுடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். ஜப்பான், மெய்யழகன் போன்று அடுத்தடுத்து தோல்வி படங்கள் தான் அவருக்கு அமைந்து வருகிறது. இதனால் வடிவேலு காம்பினேசனை பெரிய லெவலில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Trending News