புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நட்பை புதுப்பித்துக் கொண்ட கீரியும் பாம்பும்.. அரண்மனை 4ல் மிஸ்ஸானதை சரி கட்டிய சுந்தர் சி

Sundar C: சுந்தர் சி இப்போது ரொம்பவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணம் அரண்மனை 4 தான் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சரிந்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

கடந்த மே மாதம் தமன்னா, ராசி கண்ணா, சுந்தர் சி, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் 100 கோடி வரை வசூல் பெற்று சாதனை படைத்தது. இதனால் கொண்டாட்டத்தில் இருக்கும் சுந்தர் சி நாம் ஹீரோவாக நடித்த படமே இத்தனை கோடி வசூல் செய்து விட்டது.

இனி எதற்கு வேறு ஹீரோவை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். ஆனால் அரண்மனை 4 பட வெற்றிக்கு தமன்னா, ராசி கண்ணாவின் கிளாமர் ஆட்டம் தான் காரணம் என்பது இவருக்கு தெரியாமலா போய்விட்டது.

சரி இருக்கட்டும் இப்போது விஷயத்திற்கு வருவோம். அடுத்ததாக அவர் இயக்கி நடிக்க இருக்கும் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைய இருக்கிறாராம். பல வருடங்களாகவே நீ யாரோ நான் யாரோ என முறுக்கிக் கொண்டு இருந்த இருவரும் தற்போது எப்படி சேர்ந்தார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

வடிவேலுவை சமாதானப்படுத்திய சுந்தர் சி

ஆனால் குஷ்பூ ஆரம்பத்திலிருந்து வடிவேலுவை சமாதானப்படுத்த பல முயற்சி எடுத்திருக்கிறார். ஆனால் அவர்தான் சுந்தர்.சி இருக்கும் பக்கமே திரும்ப மாட்டேன் என பிடிவாதமாக இருந்தாராம்.

தற்போது அத்தனை கோபத்தையும் மறந்து விட்டு மீண்டும் இணைவதற்கு வடிவேலு சம்மதம் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் அரண்மனை 4 படத்தில் கூட இவர் நடிப்பதாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பே இவர்கள் இருவரும் சமாதானம் ஆகி இருக்கிறார்கள்.

ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் போயிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்களின் அலப்பறையை தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் கைப்புள்ளையாக வந்த வடிவேலுவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தற்போது மீண்டும் அப்படி ஒரு காம்போ திரும்ப வருவதில் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.

சுந்தர் சி உடன் பழம் விட்ட வடிவேலு

Trending News