Aranamanai 4 Twitter Review: சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 இன்று வெளியாகி இருக்கிறது. தமன்னா, ராஷி கண்ணாவின் தாராள தரிசனத்துடன் யோகி பாபு, கோவை சரளா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

கடந்த வாரமே இப்படம் வெளிவர வேண்டியது. ஆனால் ரத்னம் பட ரிலீஸால் தள்ளிப்போனது. அதை தொடர்ந்து இன்று படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

அதில் பேமிலி ஆடியன்ஸ் மற்றும் பி, சி சென்டர்களை படம் திருப்திப்படுத்தி விட்டதாக ஒட்டுமொத்த ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் முந்தைய பாகம் போல் இல்லாமல் இந்த பாகம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவை சரளா, விடிவி கணேஷ், யோகி பாபுவின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி இயல்பாக செல்லும் நிலையில் இரண்டாம் பாதி தமன்னாவால் சூடு பிடித்துள்ளது.

அதேபோல் அச்சச்சோ பாடல் ரொம்பவும் கிளாமராக இருந்தது. இது எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது.

ஆனால் அதன் பாதிப்பு எதுவும் படத்தில் இல்லாமல் கதை நகர்கிறது. ஆக மொத்தம் அரண்மனை 4 ஒட்டுமொத்த ஆடியன்சையும் திருப்திப்படுத்தி இருக்கிறது.