Sundar C: அரண்மனை 4 சுந்தர் சியை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு போய்விட்டது. தொடர்ந்துஎடுக்கப்பட்ட அரண்மனையின் நான்கு பாகங்களும் அவருக்கு சோடை போகவில்லை. வசூல் ரீதியாக எல்லாம் ஓரளவு சூப்பர் ஹிட் தான். அரண்மனை 4 மட்டும் சுந்தர் சி க்கு 70 கோடிக்கு மேல் வசூலை பெற்றுக் கொடுத்துள்ளது
மொத்த பேமிலி ரசிகர்களும் இந்த படத்திற்கு அடிமையாகி உள்ளனர். இப்பொழுது இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை மும்பையிலும் கொடி கட்டி பறந்து வருகிறது. மும்பையில் உள்ள ஒரு முக்கியமான ஆர்டிஸ்ட் இந்த படத்தை பார்த்து சுந்தர் சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஏற்கனவே பேய் மற்றும் ஹாரர் படங்களில் நாட்டம் கொண்ட அந்த பெரும்புள்ளி இப்பொழுது இந்த படத்தை பார்த்தும் மெர்சல் ஆகியுள்ளார். சுந்தர்சியை தொடர்பு கொண்டு ஒரு ஹாரர் படம் பண்ணலாம் ரெடியாக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.
அட்லீக்கு போட்டியா அண்ணன் எடுக்கும் புது அவதாரம்
2020 ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தை அப்படியே ஹிந்தியில் எடுத்தவர் அக்ஷய்குமார்.இவர் தொடர்ந்து ஹாரர் படங்கள் பண்ணுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இப்பொழுது இவருக்காக ஒரு படம் சுந்தர் சி பண்ணவிருக்கிறாராம் . கூடிய விரைவில் சுந்தர் சி மும்பை செல்கிறார்.
ஏற்கனவே அட்லீ மும்பை வாசியாக மாறிவிட்டார், இவரை போல இப்பொழுது சுந்தர்சிக்கும் அங்கே பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது இப்பொழுது பாலிவுட் பக்கமும் தன்னுடைய கொடியை பறக்க விட திட்டமிட்டு வருகிறார். கூடிய விரைவில் இவரது ஹாரர் படத்தை ஹிந்தியில் எதிர்பார்க்கலாம்.
- சுந்தர் சி-யால் மீண்டு வந்த கோலிவுட்
- அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி
- ஐட்டம் நடிகை என்ற பெயரை தவிடு பொடி ஆக்கிய சுந்தர் சி