ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

எப்படியாவது வெற்றி வேண்டும் என சங்கமித்ராவை கையில் எடுக்கும் சுந்தர் சி.. ஹீரோ, பட்ஜெட்டை கேட்ட அதிர்ச்சியில் திரையுலகம்

சுந்தர் சி க்கு சமீபத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றி படமாக அமையாமல் தோல்வியை மட்டும் கொடுத்து வந்தது. இதனை தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சுந்தர் சி அவரின் நீண்ட நாட்கள் கனவாக இருந்த படமான சங்கமித்ராவை இப்பொழுது திரும்பவும் கையில் எடுத்து இருக்கிறார்.

இந்தப் படத்தை ஏற்கனவே சுந்தர் சி 5 வருஷத்துக்கு முன்னாடியே இயக்க முடிவு செய்திருந்தார். மேலும் இதில் ஜெயம் ரவி,ஆர்யா,சுருதிஹாசன் மற்றும் சில நடிகர்கள் நடிக்கப் போவதாக வெளியாகி வந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான பிரம்மாண்டமான பர்ஸ்ட் லுக் வெளியிட்ட பிறகு சில காரணங்களால் இந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Also read: விரைவில் உருவாக உள்ள அரண்மனை 4.. பிரபல ஹீரோவை வளைத்து போட்ட சுந்தர் சி

இப்பொழுது இந்த படத்தை மீண்டும் புதிய பரிமாற்றத்தில் எடுக்கப் போவதாக அப்டேட் வெளியிட்டு இருக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பர்ஸ்ட் லுக் தயாரித்த நிலையில் இப்பொழுது ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் நடிக்க போவதாக வெளியிட்டு இருக்கிறார்.

ஏனென்றால் ஏற்கனவே ஜெயம் ரவி பொன்னின் செல்வன் படத்தில் அதே மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் அவர் இந்தப் படத்தில் ஜெயம் ரவியை தேர்வு செய்யப்படவில்லை. மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆரியவும் நடிக்கப் போவதாக வெளியாகி உள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் வாங்க முடிவு செய்துள்ளது.

Also read: 5 தொடர் தோல்விகளை கொடுத்த விஷால்.. எழுந்திருக்கவே முடியாமல் படுத்தும் மோசமான கதை தேர்வு

மேலும் இதற்கான பட்ஜெட் 450 கோடி வரை ஆகும் என்று சுந்தர் சி வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமையும் என்று தெரிவித்துள்ளார். இந்த பிரமாண்டமான படத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிக்கப் போறதை கேட்ட அதிர்ச்சியில் திரையுலகம் இருந்து வருகிறது.

மேலும் இந்த படத்திற்கான முயற்சிகள் எல்லாம் சரியாக நடந்தால் இந்த படத்தை அடுத்த ஆண்டுக்குள் வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கூடிய சீக்கிரம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சுந்தர் சியின் அடுத்த பட டைட்டில் வெளியானது. ஸ்பைடர் மேனை மிஞ்சும் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Trending News