சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மீண்டும் மீண்டும் ஹீரோவாக ஆசைப்பட்டு 15 பிளாப் படங்கள் கொடுத்த ஹீரோ.. பேராசை இன்னும் விடல

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன் நுழைந்த இவர் சில தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பின்பு இயக்குனராக அவதரித்தவர். இதுவரை இவர் 34 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். நடிகராக மட்டும் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை உடைத்துக் காட்டிய இவர் இயக்குனராகவும் சாதித்துக் காட்டினார்.

அதன் பிறகு 16 படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் இவர் ஹீரோவாக வந்த படங்கள் அடுத்தடுத்து பிளாப் படமாக தான் அமைந்தது. இதில் ஒரு படம் மட்டுமே இவருக்கு ஹிட் கொடுத்தது. அந்த ஹீரோ வேற யாருமில்லை  சுந்தர் சி தான்.பின்பு முழு நேரமும் இயக்குனராகவே இறங்கிவிட்டார்.

Also read: இரு பிரம்மாண்ட படங்களுக்கு வந்த முட்டுக்கட்டை.. பழைய சூத்திரதாரியாய் சுந்தர் சி ஆடப்போகும் ஆட்டம்

இவர் இயக்கிய படங்களில் இவருக்கு அதிகமாக வெற்றிய கொடுத்தது கலகலப்பு, தலைநகரம் மற்றும் அரண்மனை. இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க உள்ளார். இதற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது.

பின்னர் மீண்டும் இவருக்கு ஆரம்பித்தில் இருந்து வந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். அதற்காக இவருடைய வெற்றி படமான தலைநகரம் எனும் படத்தை எடுத்து அதனுடைய இரண்டாம் பாகத்தில் நடித்து வந்திருக்கிறார்.

Also read: மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

கொஞ்சம் கூட மனம் தளராமல் 16 வருஷத்துக்கு பிறகு தலைநகரம் 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்காமல் இயக்குனர் துரை தான் இயக்கி இருக்கிறார். இந்த இயக்குனர் ஏற்கனவே தொட்டி ஜெயா,முகவரி,மற்றும் இருட்டு என்ற படங்களை இயக்கினவர்.

தற்பொழுது இந்த படத்திற்கான டீசர் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த டீசரை பார்த்த பிறகு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்தப் படம் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் பேராசையின் காரணமாக அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: சுந்தர் சி இயக்கத்தில் பிளாக் பாஸ்டரான 6 படங்கள்.. பேய்களை டம்மி பீஸ் ஆக்கிய அரண்மனை

Trending News