வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வெற்றி பட நாயகியே டீலில் விட்ட சுந்தர் சி.. சென்டிமென்ட்காக கிளைமேக்ஸில் கெஸ்ட் ரோல்

சுந்தர் சி படம் எப்பொழுதுமே பார்ப்பதற்கு ஆவலாகவும், ரசிக்கும்படி சுவாரசியமாகவும் படங்களை இயக்குவதில் கெட்டிக்காரரான இயக்குனர் என்று பெயரை எடுத்தவர். ஆனால் சமீபத்தில் இவருக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை என்றே சொல்லலாம். இவர் நடித்த படங்களாக இருக்கட்டும், இயக்கிய படங்களும் சரி இவருக்கு எதுவும் சொல்லும் படியாக அமையவில்லை.

இதற்கு அடுத்து இவரின் கனவு படமான சங்கமித்ரா படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதில் சில பிரச்சனைகளால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார். மேலும் அதற்கு தீர்வு காணும் வரை சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டார். அதனால் வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயத்தில் இவரது படமான அரண்மனையின் நான்காம் பாகத்தை இயக்கப் போகிறார்.

Also read: சுந்தர் சியின் அடுத்த பட டைட்டில் வெளியானது. ஸ்பைடர் மேனை மிஞ்சும் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக இருந்தது. அவருக்கும் இந்த கதை பிடித்துப் போன பிறகு அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் அவர் அதிகமான சம்பளத்தை கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு ஆடிப் போன சுந்தர் சி இந்த படத்தில் நானே நடித்துக் கொள்கிறேன் என்று தடாலடியாக அறிவித்துவிட்டார்.

அதன்பின் இந்த படத்தை தயாரிப்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. முதலில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்தது. அப்புறம் அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ தெரியவில்லை லைக்கா நிறுவனம் விலகிவிட்டது. இப்பொழுது இந்த படத்தை ஏஜிஎஸ் மற்றும் சுந்தர் சி சேர்ந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read: சுந்தர் சி க்கு தலைவலி கொடுத்த 4 ஹீரோக்கள்.. வரலாறு படத்திற்கு வைத்த ஆப்பு

ஒரு வழியாக இந்த படத்திற்கு வந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து விட்டு இரண்டு நாட்களுக்கு முன்னாடி சூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது அரண்மனை படத்தில், இரண்டு பாகத்திலும் நடித்த கோவை சரளா இந்தப் பாகத்தில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் சுந்தர் சி, இந்தப் படத்தில் அவர் நடித்தால் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான படம் போல் இருக்கும் என்று வேறு வழி இல்லாமல் இந்த கஷ்டமான முடிவை எடுத்து விட்டாராம்.

ஆனாலும் சுந்தர் சி மனதில், கோவை சரளா நடித்தால் அது வெற்றி பெறும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அரண்மனை 3 இல் கோவை சரளா இல்லாததால் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமையவில்லை. அதனால் அரண்மனை 4 இல் சென்டிமென்ட்காக கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு கெஸ்ட் ரோலில் மட்டும் நடிக்க வைக்கணும் என்று முடிவு செய்து இருக்கிறார். இவரோட தேவைக்கு அவரை பகடைக்காயாக யூஸ் பண்ணுகிறார் என்று பலரும் நக்கலாக பேசி வருகிறார்கள்.

Also read: விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

Trending News