புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இளையராஜா இல்லாமல் ஜெயித்து காட்டிய ஒரே இயக்குனர்.. இந்த படங்களில் கிடைத்த அந்தஸ்து

Illaiyaraja and Sundar c: 80, 90களில் இளையராஜா தான் அனைத்து படங்களிலும் கிங் என்று சொல்வதற்கு ஏற்ப இசைஞானியாக வலம் வந்தார். அந்த வகையில் ஒரு படம் ஹிட் ஆகுதோ இல்லையோ இவர் பாடல் மூலம் அந்த படம் மக்களிடம் ரீச் ஆகிவிடும். அந்த அளவிற்கு இசைஞானி தான் அனைத்து படங்களின் வெற்றிக்கும் ஒரு உயிரோட்டமாக இருந்திருக்கிறார்.

அப்பொழுது மட்டும் அல்ல இப்பொழுதும் இவருடைய பாடல்கள் தான் அனைவருக்கும் ஒரு தாலாட்டாகவும், காதலுக்கு தூதுவாகவும், சோகத்திற்கு ஆறுதலாகவும் பல வழிகளில் ஒரு தீர்வாக இருக்கிறது. அப்படிப்பட்ட இளையராஜாவை மறைமுகமாக ஒதுக்கி சுந்தர் சி அவர் இயக்கிய 35 படங்களிலும் இசைஞானி இல்லாமல் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒத்த படங்களில் கூட கூட்டணி இல்லை

இயக்குனர் மணிவண்ணன் இடம் உதவி இயக்குனராக இருந்த சுந்தர் சி முதல்முறையாக முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களையும் ரஜினி, கமல், அஜித் போன்ற ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இளையராஜாவை வைத்து எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனென்றால் வளர்ந்து வரும் இயக்குனர்களாக இருக்கட்டும், பெரிய இயக்குனர்களும் அவர்களுடைய படங்களில் இளையராஜா கால் சீட் இருந்தால் தான் இயக்குவோம் என்று பிடிவாதமாக இருந்த காலங்கள் அப்பொழுது.

அந்த நேரத்தில் வளர்ந்து வரும் சுந்தர் சி மட்டும் இளையராஜாவை பொருட்படுத்தாமல் தன்னுடைய கதையை மட்டுமே நம்பி படங்களை எடுத்தார். அத்துடன் இவர் எப்படி வளர்ந்து வரும் ஒரு இயக்குனராக கஷ்டப்பட்டு படிப்படியாக வந்தாரோ, அதே மாதிரி அப்பொழுது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களை தூக்கிவிடும் விதமாக அவர்களை வைத்து பாடல்கள் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார்.

ஒருவேளை இதுதான் இவருடைய வெற்றிக்கும் அந்தஸ்துக்கும் கிடைத்த சன்மானமாக கூட பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இளையராஜாவின் தீவிர ரசிகராக இருக்கும் சுந்தர் சி தற்போது வரை இளையராஜா கூட்டணியில் ஒரு படம் கூட எடுக்காமல் ஜெயித்து காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி பற்றிய தகவல்கள்

Trending News