12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜா படத்தை இப்பொழுது ரிலீஸ் செய்தும்கூட சுந்தர் சிக்கு ஜாக்பாட் அடித்தது. 13 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சக்க போடு போட்டது. இதனால் சுந்தர் சி டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறார்.
தொடர்ந்து விஷாலை வைத்து அடுத்த படமும் பண்ணுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் ஐடியல் பீச் ஸ்டோரி டிஸ்கஷனில் இருந்த சுந்தர் சி விஷாலுக்கு கிலோ கணக்கில் அல்வாவை கொடுத்துவிட்டார். அடுத்து அவர் இயக்கப் போகும் படம் மூக்குத்தி அம்மன் 2.
நயன்தாரா பிசியாக உலா வந்ததால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் இப்பொழுது அவர் கால்சீட் கிடைத்துவிட்டது. 100 கோடி செலவில் இந்த படம் உருவாக உள்ளது. இவ்வளவு அதிகமான பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் உருவாக போகும் முதல் சாமி படம் இதுதான்.
இந்த படத்தில் ஒரு சின்ன போர்ஷன் வரலாற்று கதையையும் கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி. அதனால்தான் இதற்கு இவ்வளவு பட்ஜெட் என்கிறார்கள். அதற்குண்டான வி எப் எக்ஸ் செலவிற்கு 70 கோடிகள் வரை ஒதுக்கி உள்ளார்கள. இந்த படத்திற்காக சுந்தர் சி வாங்க போகும் சம்பளம் 20 கோடிகள். நயன்தாராவிற்கு 10 கோடிகள்.
ஏற்கனவே சுந்தர் சி சங்கமித்ரா என்ற வரலாற்று படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். அதற்கு பதிலாக தான் இந்த மூக்குத்தி அம்மன் கதையில் ஹிஸ்டாரிக் சம்பவங்களை கையில் எடுத்திருக்கிறார். என்னாலையும் வரலாற்று படங்கள் எடுக்க முடியும் என்பதை காட்டுவதற்காக சுந்தர் சி இதை கையாண்டு இருக்கிறார்..