வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சுந்தர் சி-யின் கலகலப்பான காமெடியுடன் வெளியான காபி வித் காதல்.. சுடச்சுட வந்தா ட்விட்டர் விமர்சனம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பான காமெடி உடன் வெளியாகி இருக்கும் படம் காபி வித் காதல். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, டிடி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காபி வித் காதல் படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கலகலப்பு 2 படத்திற்கு பிறகு ஜீவா, ஜெய், சுந்தர் சி கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது.

Also Read :4 வருடமா கிடப்பில் போட்ட மெகா பட்ஜெட் படம், தூசி தட்டிய சுந்தர் சி.. மணிரத்னம் பற்ற வைத்த நெருப்பு

காபி வித் காதல் படத்தில் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் கொண்ட குடும்பம். இதில் மூத்த மகன் மிகவும் பொறுப்பானவனாக உள்ளார். மேலும் தந்தையைப் போலவே தனது குடும்பத்தை பார்த்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களால் குடும்பத்தில் நடக்கும் திருப்பங்களே இப்படத்தின் கதை.

மேலும் இந்த படத்தில் ஜெயிக்கும், மாளவிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. ஆனால் ஜெய் அமிர்தாவை விரும்புகிறார். மேலும் ஜெயின் சகோதரரான ஜீவா மாளவிகாவை விரும்புகிறார். கடைசியில் யாருடைய காதல் ஜெயித்தது, இந்த கல்யாணத்தை நிறுத்துகிறார்கள் என்பதுதான் காபி வித் காதல்.

coffee-with-kadhal

Also Read :சுந்தர் சி க்கு ஆப்பு வைத்த ஹீரோ.. பத்து வருடங்களாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம்

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதேபோல் படத்தில் ஒளிப்பதிவும் வேற லெவலில் இருந்தது. ஒரு முழு என்டர்டைன்மென்ட் படமாக இந்த படம் இருந்ததால் ரசிகர்கள் இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

coffee-with-kadhal

படத்திற்கு மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் தேவை இல்லாமல் நிறைய கதாபாத்திரத்தை கொண்டு வந்துள்ளனர். அதிக கவர்ச்சி மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் படத்தின் ரன்னிங் டைமும் அதிகமாக இருந்தது. காமெடியுடன் கலக்கலாக வந்த காபி வித் காதல் படத்திற்கு 5 மார்க்குக்கு 2.5 கொடுக்கலாம்.

Also Read : நான் இன்றுவரை கடனில் தான் வாழ்கிறேன்.. குமுறிய நடிகர் ஜெய்

Trending News