Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது.
அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா வர்ஷினி இருவரும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அதில் சுனிதா ஒவ்வொருவரையும் வச்சு செய்துள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள புரோமோவில் அவர் ஜாக்லினை பார்த்து உனக்கு மட்டும் தான் இந்த வீட்டில் ஒரு துணை தேவைப்படுது என சரியான கருத்தை சொன்னார்.
ஏனென்றால் கடந்த வாரம் முழுவதும் அவர் மஞ்சரியுடன் கூட்டு சேர்ந்ததை பார்த்தோம். அதைத்தொடர்ந்து சுனிதா சௌந்தர்யாவின் ரியாக்ஷன் யுக்தியை பற்றி கலாய்த்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா
ஏற்கனவே கடுப்பில் இருந்த அம்மணி இன்னும் முகத்தை சுருக்கி வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதை அடுத்து விஷாலிடம் நீ என்னடா முக்கோண காதல் ட்ரை பண்றியா.
மன்மதன் மாதிரி அம்பு விடுற என்ன நடக்குது இங்க என சரியான கேள்வியை கேட்டார். இதனால் விஷாலின் முகம் சோகமாக மாறியது.
இப்படியாக இவரின் வரவு மற்ற போட்டியாளர்களை கலவரப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஆட்டத்தில் ஒரு மாற்றம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் சிலரின் நம்பிக்கை உடையவும் வாய்ப்பு அதிகம். இப்படியாக இன்றைய எபிசோட் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.