2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடியதோ,இல்லையோ ஹிட் பாடல்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். பல பாடல்கள் கேட்கும் பலரையும் குத்தாட்டம் போட வைத்தது. அதில் 10 டாப் பாடல்களை பற்றி பார்க்கலாம்.
அரபிக் குத்து: நடிகர் விஜயின் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் படம் படுதோல்வியடைந்தது. படத்தில் குத்தாட்டம் போடும் வகையில், அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் உள்ளிட்டவை அனிருத் இசையில் வெளியானது. இந்த இரு பாடல்களிலும் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரின் நடனம் சக்கைபோட்டிருக்கும் . இதில் அரபிக் குத்து பாடல் யூட்யூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 2022 ஆம் டாப் 10 பாடல் வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.
டான்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். அனிருத்தின் இசையில் வெளியான இப்படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், ஜலபுல ஜக்கு பாடல் இளைஞர்கள் முதல் குழந்தைகள் முதல் குத்தாட்டம் போட வைத்தது. 2022 ஆம் ஆண்டின் டாப் 10 பாடல்களில் 2 ஆம் இடத்தை இப்பாடல் பிடித்துள்ளது.
திருச்சிற்றம்பலம்: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் காமர்சியல் ரீதியாக குடும்பங்கள் பார்த்து ரசித்த படமாக ஹிட்டானது. இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காத என்ற தனுஷ் குரலில் வெளியான பாடலில் நித்யாமேனன், ராஷிக்கண்ணா,தனுஷ் உள்ளிட்டோரின் நடனம் ரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் வைரலானது. மேலும் இப்படத்தில் இன்னொரு பாடலாக இடம்பெற்ற தேன்மொழி பாடலையும் தனுஷ் பாடிய நிலையில் சிறந்த ஒருதலை பாடலாக 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது .
விக்ரம்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மாஸ் ஹிட்டானது. இப்படத்தில் கமல்ஹாசன் ஆடிய பத்தல பத்தல நடனம் தியேட்டரில் பட்டையை கிளப்பியது. மேலும் விக்ரம் பட பிஜி எம்மும் கமலின் குரலில் வெளியாகி பலரது மொபைல் ரிங்க்டோனாக இடம்பெற்றது.
காதுவாக்குல ரெண்டு காதல்: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் நான் பிழை பாடல் அனிருத்தின் இசையில் மெலோடியாக வெளிவந்தது .நயன்தாராவிற்காக பாடல் வரிகளை எழுதி விக்னேஷ் சிவன் அசத்தியிருப்பார். இப்பாடல் 2022ஆம் ஆண்டின் டாப் 10 பாடல் வரிசையில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
விருமன்: நடிகர் கார்த்தி நடிப்பில் யுவன் இசையில் வெளியான கஞ்சா பூ கண்ணால பாடல் கிராமத்து சாயலில் சித் ஸ்ரீராமின் குரலில் கலக்கலாக வெளிவந்திருக்கும். இப்பாடல் 2022 ஆம்ம் ஆண்டின் டாப் 10 பாடல்களின் வரிசையில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
புஷ்பா: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் பாடல்கள் 2022 இல் வெளியாகி சக்கைபோடு போட்டது. இப்படத்தில் ஊ சொல்றியா ஊ,ஊ சொல்றியா ஐட்டம் பாடலில் சமந்தா ஆடி ரசிகர்களை கிறங்கடித்திருப்பார்.தமிழில் ஆண்ட்ரியாவின் அசத்தலான குரலில் வெளியான இப்பாடல் 2022 ஆம் ஆண்டின் டாப் 10 பாடல் வரிசையில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது.