திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

24 ஆவது ஆண்டு அடி எடுத்து வைத்த சூப்பர் ஹிட் படம்.. விஜய் சினிமா கேரியரில் ஏற்பட்ட திருப்புமுனை

இன்று சினிமாவில் உச்சகட்ட நாயகனாக இருந்து வரும் விஜய். இந்த நிலையை அடைவதற்கு ஒரு சில படங்கள் முக்கிய காரணமாக அமைந்தன. அந்தப் படங்கள் இப்பொழுது வரை ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு இவரை கை தூக்கி விட்ட படத்தை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்

இவர் நடித்த படங்களில் மிகவும் முக்கியமான இந்தப் படத்தை இன்றுவரை யாராலயும் மறக்க முடியாத அளவுக்கு  சூப்பர் ஹிட் ஆக நடித்துக் கொடுத்தார். அதில் விஜய் என்ற ஹீரோயிசம் காட்டாமல் இவரின் இயல்பான நடிப்பில் நடித்திருப்பார். அந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸை பெரிதும் கலக்கியது.

Also read: விஜய்க்கு முன்னாடி இளையதளபதி பட்டம் வைத்திருந்த ஹீரோ.. அடுத்த விஜயகாந்த் என பெயர் எடுத்த நடிகர்

எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தின் பெயரை கேட்டாலே எல்லாரும் 90s க்கு போயிட்டு ஒரு மலரும் நினைவை கொண்டு வரும் படமாகத்தான் இப்பொழுது வரை இந்த படம் இருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து, பின்பு இவர்கள் பெரிய அளவில் ரசிக்கப்பட்ட ஜோடியாக வலம் வந்தார்கள்.

இதில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது . அதிலும் இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் சீன் ரசிகர்களை கதையோடு மூழ்க வைக்கும் அளவிற்கு விஜய் மற்றும் சிம்ரன் எதார்த்தமான நடிப்பில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் இவர்கள் பெஸ்ட் ரொமாண்டிக் ஜோடி என்றும் பெயர் பெற்றனர்.

Also read:  வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

இந்தப் படம் 24வது ஆண்டு அடி எடுத்து வைத்து சூப்பர் ஹிட் படமாக இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிஸில் 200 நாட்களுக்கு மேல இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் 100 நாட்களுக்கு மேல் வெற்றியை பார்த்தது.

இந்த படத்திற்குப் பிறகு விஜய்யின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் மற்றும் சிம்ரன் மேலும் பல படங்களில் ஜோடியாக நடித்து அந்தப் படங்களும் பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

Also read: உங்களுக்கு மார்க்கெட் இல்ல, அஜித் கூட நடிக்க மறுத்த நடிகை.. பின் சிம்ரனை பார்த்து காண்டான 90-களின் கனவுக்கன்னி

Trending News