சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

500 எபிசோடு தாண்டி கிளைமாக்ஸ் எட்டிய விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.. திடீர் முடிவால் ஏற்பட்ட ஏமாற்றம்

விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்டார் மகாநதி மற்றும் சிறகடிக்க ஆசை போன்ற இரண்டு சீரியல்களும் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை கவர்ந்ததால், அடுத்ததாக பொன்னி என்ற புத்தம் புது சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் முடிவுக்கு வருவது உறுதியானது.

ஆனால் யாரும் எதிர்பாராத 500 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல் நிறைவடைய போகிறது என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து மௌன ராகம் சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: அட்வகேட்னா நிறைய பொய் சொல்லனுமே.. ஜூலியை சீரியலில் பொறுக்கி போட்ட விஜய் டிவி

இதில் நடிகர் சல்மான், ராகுல் ராம், ராஜீவ் பரமேஸ்வர், ரவீனா, ஷில்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அதிலும் கதாநாயகி ரவீனா தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாகவும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் 500 எபிசோடு கடந்த மௌன ராகம் 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தான் மௌன ராகம் 2 சீரியலின் கதைக்களமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் சக்தி குடும்பத்திற்காக தொடர்ந்து நல்லதை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஸ்ருதி சொந்த வீட்டிலேயே ஏகப்பட்ட திருட்டு வேலைகள் செய்திருப்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.

Also Read: இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்

அதிலும் அம்மனுக்கு கொடுக்கக்கூடிய நகையை திருடி வைத்துக் கொண்டு, அதை சக்தி மீது அபாண்டமாக பழி போட்ட ஸ்ருதியின் சுய  ரூபத்தை தற்போது வருண் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். இதன் பிறகு ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். ஆனால் பாசத்திற்கு ஏங்கியே ஸ்ருதி தரங்கெட்ட வேலைகளை செய்து இருப்பார். இதன்பின் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ருதி தன்னுடைய தவறை எல்லாம் உணர்ந்து, கணவர் தருணிடம் மனதார மன்னிப்பு கேட்டு மறுபடியும் வீட்டிற்குள் வந்துவிடுவார். இதோடு சீரியல் நிறைவடைய போகிறது.

இதன் பிறகு புத்தம் புது சீரியலான பொன்னி சீரியல் ஒளிபரப்பாக போகிறது. தந்தை பட்ட கடனுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அடமானம் வைக்கும் அப்பாவி பெண்ணின் கதையைப் பற்றியதுதான் பொன்னி சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்த நடிகை வைஷ்ணவி தான் நடித்துள்ளார். விரைவில் துவங்கப்படும் இந்த புத்தம் புது சீரியலுக்கும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

Trending News