புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Keerthy Suresh: ரிவால்வர் ரீட்டா கீர்த்தி சுரேஷ் காட்டில் கொட்டும் பேய் மழை.. அட்லீ தயாரிக்கும் விஜய்யின் ரீமேக்

கீர்த்தி சுரேஷ் மற்றும் அட்லி இருவருக்கும் மேனேஜர் ஜெகதீஷ். இவர் தளபதி விஜய்யின் பிஆர்ஓ வாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஷன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் ஜெகதீஷும் ஒரு பார்ட்னராக இருந்து வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா கீர்த்தி சுரேஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம். இந்த படம் பேஷன் ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு முன்பே முடியக்கூடிய இந்த படம் இன்னும் இழுத்து கொண்டே இருக்கிறது .

அட்லீ தயாரிக்கும் விஜய்யின் ரீமேக்

அட்லி விஜய்யின் தெறி படத்தை ஹிந்தியில் தயாரிக்கிறார்.அந்தப் படத்தில் சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கிறார். அதனால் தெறி ஹிந்தி ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்றால் கீர்த்தி சுரேஷ் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம்.

ரிவால்வர் ரீட்டா படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷ். அட்லியின் மேனேஜரும் ஜெகதீஷ் தான். அட்லி மற்றும் ஜெகதீஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அதனால் இரண்டு படங்களுக்கும் கீர்த்தி சுரேஷுக்கு முழு சுதந்திரம் தான். இரு படங்களுக்கும் கால்ஷீட் பிரச்சனையே இல்லாமல் முழு சுதந்திரத்தோடு நடித்து வருகிறார்.

தெறி படம் கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்டது. அந்த படம் ரிலீசான பிறகு ஹிந்தியிலும் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அட்லீயும் பாலிவுடில் கீர்த்தி சுரேஷ்க்கு நிறைய சிபாரிசு செய்து வருகிறார். ரிவால்வர் ரீட்டா, தெறி ஆகிய இரு படங்கள் வந்த பிறகு மீண்டும் தமிழில் கீர்த்தி சுரேஷ் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகையர் திலகம் படத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் நம்பியிருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா தான்

Trending News