திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

Rajini went in disguise to watch Suriya’s Movie in theater: தமிழ் சினிமாவில் சிவகுமாரின் மகன் என அடையாளத்துடன் 1997 இல் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான சூர்யா விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இவரின் கங்குவா  பலமொழிகளிலும் ரெடியாகி வருகிறது. கங்குவா படத்தின் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவம்  ஒன்றை பார்க்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும்  ஹிட் அடிக்க கௌதமின் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்து 2003இல் வெளிவந்த திரைப்படம் காக்க காக்க. படம் வெளிவந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் பசுமையான நினைவுகளை சூர்யா பகிர்ந்து இருந்தார். இப்படம் தனக்கு ஜோதிகா உட்பட அனைத்தையும் கொடுத்தது என்று கூறியதிலிருந்து சூர்யாவிற்கு இப்படம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறியலாம்.

Also read: சிவக்குமார் வில்லனாக நடித்த ஒரே படம்.. கமல் கைவிட்ட மோசமான கதாபாத்திரம்

எழுபதுகளில் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என வர்ணிக்கப்படும் சிவக்குமாருடன் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில்  நடித்ததில் இருந்து அவரது நட்பை பேணி வரும் சூப்பர் ஸ்டார் அவர்கள் சூர்யாவின் காக்க காக்க வெளிவந்தபோது இப்படத்தில் சூர்யா காவல் அதிகாரி வேடத்தில் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்க தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்றாராம்.

காக்க காக்க படத்தில் சூர்யாவின் நடிப்பை கண்டு அசந்து போய்விட்டாராம். படத்தை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி சூர்யாவை தொடர்பு கொண்டு  படத்தை பற்றி மற்றும் காட்சிகள் பற்றி புகழ்ந்தாராம். சூப்பர் ஸ்டார் பொசிஷனில் இருக்கும் அவர் வளர்ந்து வரும் நடிகர்களை கலைஞர்களை அவர்களின் திறமையை பேசுவது  கலைக்கு ஆரோக்கியமான ஒன்றாகும். அதுவும் சிவக்குமாரின் நட்புக்காக அவரது மகனின் படத்தை தியேட்டருக்கு சென்று மாறுவேடத்தில் பார்ப்பது இதுதான் முதல் முறை.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் சூர்யா அவர்கள் தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை மெருகேற்றி வருகிறார். அப்பாவை போலவே இப்போதும் இளமை பொலிவுடன் தந்தையை மிஞ்சும் தனயனாகவே படங்களில் தோற்றம் அளிக்கிறார்.

Also read: சுட சுட ரெடியான ஐந்து பார்ட்-2 படங்கள்.. வான்டடா நான் நடிக்கணும்னு எஸ் ஜே சூர்யா போட்ட போடு

Trending News